RSS

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் ….

17 Jun

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் ….
குழந்தைகள் குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன !..
மனிதர்கள்தான் அடித்துப்பிடித்து …
அவர்களை மதங்களில் மாற்றிக்கொள்கிறோம் !…

என்மதம் உன்மதம் என ,ஒவ்வொருவரும் …
உயர்வும் ,தாழ்வுமாய் தரம் பிரிக்கிறோம் !..
எண்ணங்களில் எழுச்சி திரவங்களை ஊற்றி ..
பற்றவைத்து பூரித்துப்போகிறோம் !…

பற்றியெரிவதை பார்த்து பயந்துபோவதும் ….
நீரெடுத்து அணைக்க ஒருகூட்டம் ஓடுவதும் …
நிற்காமல் எரிவதற்கு ஒருகூட்டம் மோதுவதும் ….
எதுவும் தோன்றாமல் எஞ்சியது மிரள்வதுமாய் …

புரிந்தாலும் புரியாமல் வெறியோடு திரிபவர்க்கு ,
புத்தகத்தில் படித்தாலும் புரியாமல் விழிப்பவர்க்கு ,
மனதில் மண்ணையே சுமந்து மட்கிப்போனவர்க்கு ,
என்ன சொல்லி என்ன புரிய வைக்க ?…

சொத்துக்கும் சுகத்துக்கும் சொக்கித்திரிவதும் …
சொந்தபந்த நினைவெல்லாம் வெட்டித்திரிவதும் …
மதங்களை உட்கொண்டு மாட்சிமை புரிவதும் …
மனம்போன போக்கில் ஏசித் திரிவதும் …

குளற்றுநீர் வற்றிப்போனதும் ..ஆற்றுநீர் அடித்துப்போனதும் …
ஏரிநீர் ஏமாற்றிவிட்டதும் ..கிணற்றுநீர் காய்ந்தேபோனதும் ….
எஞ்சியவையெல்லாம் கடல்நீராகிப்போனதே !…
எதற்குமே உதவாத மதம்பிடித்த மனிதனைப்போல்

10406769_331120727042074_4328465882605504469_nJ Banu Haroon- ஜே .பானு ஹாருன் .

Advertisements
 
Leave a comment

Posted by on June 17, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: