RSS

நானொரு கேள்வி எழுப்புகிறேன்–அதை..

19 Jun

நானொரு கேள்வி எழுப்புகிறேன்–அதை
நாயகம் பெயரால் அனுப்புகிறேன்
நீயொரு பதிலைச் சொல்லிவிடு–அந்த
நினைவில் என்னை மிதக்கவிடு! (நானொரு. ..)

அழுது கேட்டும் கிடைக்கவில்லை–உன்
ஆணை இன்னும் பிறக்கவில்லை
விழுந்து சாக மனமுமில்லை–அது
வீணர் வழக்கம் எனக்குமில்லை! (நானொரு. ..)

மனிதப் பொறுமை கடந்துவிடும்–என்
மனத்தின் குமுறல் உடைந்துவிடும்
இனியும் கருணை மறுப்பதென்றால்–என்
இறைவா என்னுயிர் துடித்துவிடும்! (நானொரு. . . )

கேட்டால் தருவது தருமமல்ல–நான்
கெஞ்சிக் கேட்பதும் புதுமையல்ல
ஆட்டம் முடியும் எல்லைவரை–நீ
அருள மறுப்பது நியாயமல்ல! (நானொரு. . . )

பிடரி நரம்பின் பக்கத்தில்–உன்
பீடம் இருப்பதை நானறிவேன்
இடரோ துயரோ எதுவரினும்–அது
எனக்குள் இருப்பினும் கவலையில்லை! (நானொரு. . . )

இறைவா உன்னைப் பணிகின்றேன்–இனி
எதுவும் வரட்டும் துணிகின்றேன்
நிறைவோ குறைவோ வெறுப்பில்லை–நீ
நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை! (நானொரு. . . )

புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன்–என்
புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்
செத்ததும் எதுவும் தொடர்வதில்லை–என்
சிந்தனை அங்கே படர்வதில்லை! (நானொரு. . . )

சொட்டுத் துளியில் படைத்துவிட்டாய்–உன்
சுவனம் வரைக்கும் அழைத்துவிட்டாய்
கெட்டுத் தொலைவது விதியுமில்லை–உன்
கிருபை காக்கும் தடையுமில்லை! (நானொரு. . . )

முஹம்மது என்னும் ஒளிப்பிழம்பு–அதன்
முன்னே கிடக்கும் சிறுதுரும்பு
எனக்குக் குறைகள் வருவதில்லை–இந்த
ஈமான் கணக்கு முடிவதில்லை! (நானொரு. . . )

(தேவைப்படும் கவிதைக் கண்ணிகளை எடுத்துக் கொள்ளவும்.)
ஹனீபா நவ்ஷாத்திற்குச் சென்ற மாதம் அனுப்பிய நான்காவது கவிதை:–
–4–

398002_105069096342377_737277079_nHilal Musthafa
அல்லாஹ்வின் அருள்கனிந்த அண்ணல்நபி சமுதாயம் [பகுதி …
ரஹ்மானே அன்பாளா ரமலானின் அருளாளா கையேந்திக் கேட்கி…..

 
Leave a comment

Posted by on June 19, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: