RSS

Monthly Archives: July 2015

என்னாசை……/ இராஜ. தியாகராஜன்

உள்ளத்தில் மாந்தரனைவர்க்கும் எவ்வளவோ ஆசைகள், ஆவலாதிகள் என்னுளத்து ஆசைகள் கீழே;-

என்னாசை……

எந்நாளும் எழிற்கவிதை நானும் யாத்தே
…..எத்திக்கும் எந்தமிழை வளர்க்க வேண்டும்
கந்தமெனக் கமழும்பா வெழுதி நாளும்
…..கயமைகளைக் கவித்தீயில் பொசுக்க வேண்டும்
நொந்தலையும் நாதியிலாப் பேர்கள் வாழ்வில்
…..நோதலற வாழப்பா வனைய வேண்டும்
புந்தியிலே புகுந்தென்னைக் காக்கும் வாணி
…..புத்தழகைப் பைந்தமிழில் புனைய வேண்டும் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on July 21, 2015 in 1

 

டிஜிட்டல் நார்சிஸம்

image-11புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 16, 2015 in 1

 

இதுதான் காதல் என்பதா….?

11709247_868981409862691_2245436584443064089_n11138126_868982156529283_8630481034110776855_n11143347_868997503194415_986222021245577722_nஉன்னோடு நானும்
என்னோடு நீயும்…
உன்னதம் என்பது இதுதானா…?

எனக்கு மட்டும் புரிவது போல்
நீ பேசும்
இரகசியங்களில்
கசிந்து கரைகிறேன்.

எத்தனைப் பெரிய
இழப்பு ஏற்பட்டிருக்கும்,
உன் உறவை நான்
உளம் கொள்ளாதிருந்திருந்தால்… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 16, 2015 in 1

 

உணவே மருந்து : பாசிப்பயறு – நன்மைகள் !

imagesபாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 16, 2015 in 1

 

10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்; 1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடைகள். உருப்படுமா நாடு?

இந்த அரசின் கேடு கெட்ட மக்கள் நலப்பணியை அதன் கன்னத்திலேயே அப்பி வெட்கித் தலை குனியும் அளவுக்கு வாட்ஸ் அப்பில் வந்த பதிவு இது.

ரோஷமுள்ளவர்களும் தங்கள் சந்ததியினரின் நலமான எதிர்காலத்தை விரும்புவோரும் கேடு கெட்ட அரசியலை எதிர்ப்போரும் இதனைத் தங்கள் பக்கத்தில் மீள்பதிவு செய்வதை எதிர்கொண்டு விழைகின்றேன்.

எத்தனைபேர் தங்கள் பக்கத்துக்கும் பதிவுக்கும் உயிர் கொடுக்கிறவர்களாக இருக்கின்றார்கள்? என்பதையும் இதன் மூலம் கண்டு கொள்வோம் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 11, 2015 in 1

 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் !

***நேற்று வரை தோளில் கைபோட்டிருந்த சிலர், இனிமேல் இவனுக்கு அலுமினிய கப்பில்தான் சாயா கொடுக்கணும் என்று இரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தால், சுயமானம் கொண்டிருப்பவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, வெளியில் கையேந்தாமல், தன் கையில் கிடக்கும் கடிகாரத்தை அடமானம் வைத்தாவது, பூபோட்ட பெரிய சைஸ் சிங்கப்பூர் கிளாஸ் வாங்கி வந்து, புதுப் பாயும் தரையில் விரித்து குடும்பத்தோடு அமர்ந்து மணக்க மணக்க சாயா குடித்து வைப்பது என்பது மனிதர்களிடம் இயல்பாகவே காணப்படும் ஒரு உணர்வின் வெளிப்பாடே. இது ஒரு பக்கமாக இருக்கட்டும், விஷயத்துக்கு வருவோம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 8, 2015 in 1

 

அதான் அழைப்புக் கேட்டு கோடு கிழித்துக் கிடைத்த திரு அதான் கோட்டில் இன்றைய நோன்பு திறப்பு !

அதான் அழைப்புக் கேட்டு
கோடு கிழித்துக் கிடைத்த
திரு அதான் கோட்டில்
இன்றைய நோன்பு திறப்பு !

பெயரிலியே திருவை வைத்திருக்கும் திருவிதாங்கோட்டிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது ?

சேரமான் பெருமாள் மன்னரின் உறவினன் கோலேகா என்பவன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். இது மனிதர்கள் யாரும் வாழாத காட்டுப் பகுதியாக அப்போது இருந்தது. அங்கே வன விலங்குகளை வேட்டையாடுவது கோலேகாவின் பொழுதுபோக்கு.

ஒருநாள் அவன் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது அவன் அதுவரை அறிந்திராத ஒரு மொழியில் அழைப்போசை ஒன்று கேட்டது. யார் அப்படி அழைப்பது என்று புரியாமல் கோலேகா வேட்டையை நிறுத்திவிட்டு அங்குமிங்கும் தேடினான்.
அரபு உடை தரித்த ஒருவர் தன் சகாக்கள் சூழ அங்கே நின்றுகொண்டு பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்கள் யாரென்று தெரியாமல் அவன் தவிப்பதைக் கண்ட அந்தப் பெரியார் தன் பெயர் மாலிக் முஹம்மது என்றும் சேரமான் பெருமாள் மன்னர் தங்களை இங்கே அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறி மன்னர் தந்த கடிதத்தையும் கோலேகாவிடம் கொடுத்தார்.
மனம் மகிழ்ந்த கோலேகா தனது அம்பால் ஒரு கோடு கிழித்து அங்கே பள்ளிவாசல் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியதோடு அதை சுற்றியுள்ள ஏராளமான இடங்களையும் அன்பளிப்பாக வழங்கினான்.

மாலிக் முஹம்மது அவர்கள் மாலிக் இப்னு தினாரின் சகோதரர் மகன்.
அரேபியாவுக்குச் சென்று முஸ்லிமான சேரமான் பெருமாள் மன்னர் மாலிக் தினாரையும் அவரது குழுவையும் கேரளாவுக்கு இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பி வைத்தார். மாலிக் முஹம்மது அவர்கள் இங்கே வந்து பாங்கு சொல்லி மன்னன் கோலேகா கோடுபோட்டு இடம் கொடுத்ததால் இந்த இடம் அதான் கோடு என்று அழைக்கப்பட்டது . பின்னர் திருவும் சேர்ந்து திரு அதான் கோடு என்றாகி இப்போது திருவிதாங்கோடு என்று அழைக்கப்படுகிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 6, 2015 in 1