RSS

விழி பிதுங்கும் கிரேக்கம்..!

01 Jul

விழி
பிதுங்கும்
கிரேக்கம்..!

ஒரு காலத்தில்
உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்கிய நாடு.
சாக்ரடீசும்
பிளாட்டோவும்
அரிஸ்டாடிலும்
கிரேக்க நாட்டின், மண்ணின் மைந்தர்கள்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் இங்கிருந்து தான் உற்பத்தியாயிற்று. மகா அலெக்சாண்டர், இங்கிருந்து தான் உலக நாடு களை, வேட்டையாட துவங்கினான். உலகின் பெரும்பாலான நிலப்பரப்பு, அவனால் கிரேக் கத்தின் வசமாயிற்று.

வானுயர்ந்த மலைகளையும், குட்டித் தீவுகள் பலவற்றையும், தன்னகத்தே கொண்ட நாடு. உலக அரங்கில், இன்றும் முதன்மை சுற்றுலா தலமாக திகழ்கிறது. கப்பல் வாணிபத்தில், கொடி கட்டி பறக்கும் இந்த நாட்டில் வாழும் கோடீஸ்வரர்கள் எல்லாம் பெரும் கப்பல் அதி பர்களே ஆவர். (Former) அமெரிக்க ஜனாதிபதி JOHN F.KENNEDY யின் மனைவி…., ஜாக்குலின் கென்னடியை, மறு மணம் செய்த அரிஸ்டாடில் ஓனாசிஸ், இந்த நாட்டின் பெரும் கப்பல் அதிபராக திகழ்ந்தவர்.

உலகச் சிறப்பு பெற்ற ஒலிம்பிக்ஸ் கேம்சின், OLYMPIC GAMES – தாயகம் இந்த நாடுதான். உலகிற்கு நாகரீகத்தையும், பணபாட்டையும், கலைகளையும், அறிவாற்றலையும், சுதந்திரத்தையும், ஜன நாயகத்தையும், தனி மனித உரிமைகளையும், சட்டங்களையும், வாரி வழங்கிய நாடுதான் கிரேக்க நாடு.

உலக நாடுகள் சபை அமையவும், நேட்டோ மற்றும் யூரோப்பியன் யூனியன் போன்ற அமைப்புகள் ஏற்படவும் உதவிய நாடு இது.

உலக பொருளாதார கொள்கைகளை, உலகிற்கு ஏற்றுமதி செய்த இந்த நாடு, இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி, உருக்கு லைந்து கிடக்கிறது. ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை, இந்த நாட்டால் திருப்பி செலுத்த இயலவில்லை.
IMF நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 1.5 பில்லியன்- dollar தவணைத் தொகையை, இந்த நாட்டால், இது வரை திருப்பி செலுத்த இயலவில்லை. கெடு முடிந்து விட்டது. நாடு திவாலாகி விடும், சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. கஜானாவில்……., பணமில்லை.வங்கிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார், அந்த நாட்டின் பிரதமர். 60 டாலருக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுக்க, பொது மக்களுக்கு உரிமை இல்லை. மக்களுக்கு வேலை இல்லை, உணவில்லை, கையில் காசும் இல்லை…! நிலை தொடர்ந்தால்…., கிரேக்கம் தனிமைப்படும்.

இந்த நாட்டின் பிரதமர் அலெக்சின், தன் நாட்டை பற்றி எந்த கவலையும் இன்றி
வாழ்கிறார். குரங்கின் கையில் பூமாலை
கிடைத்தது போல் ஒரு முட்டாள் பிரதமரின்
கைகளில் சிக்கி, ஒரு சிறந்த நாடு சீரழிந்து
கொண்டிருக்கிறது. கோமாளிகள், பிரதமர் ஆனால் ஒரு நாடு எந்த அளவுக்கு சீரழியும் என்பதற்கு கிரேக்கம் ஒரு எடுத்துக் காட்டு.

புகழ் பெற்ற ஹோமரின் காவியங்களான
எலியட்டையும், யுலிசியசையும், உலகிற்கு
தந்து, எட்டா உயரத்தில் நின்று புகழ் பரப்பிய கிரேக்க சாம்ராஜ்யம், புதிய பிரதமரின்,
முழுமையான மவுனத்தாலும், முட்டாள்
தனமான செய்கைகளாலும், படு பாதாளத்தை
நோக்கி, படு வேகமாக போய் கொண்டு
இருக்கிறது. உலக நாடுகள், கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு, தங்கள் நாட்டை வழி நடத்தி செல்லும், ‘முட்டாள் பிரதமரை’ தூக்கி எறிவதற்கு, கிரேக்க மக்கள் மிகவும் வேகமாக தயாராகி வருகிறார்கள். இந்த பிரதமரை,
இன்னும் பதவியில் தொடர அநுமதித்தால், உலக பொருளாதாரமே சீர் குலைந்து விடும் என்று இந்த நாட்டு மக்கள் அஞ்சுகிறார்கள்.

11136757_10204464778207988_2983255126887612401_n 11226185_10204464778487995_4882997614089195812_n 11666235_10204464777727976_6417769532030989435_n 11694866_10204464777367967_4229558834818762206_n

Vavar F Habibullahஆக்கம் Vavar F Habibullah
Advertisements
 
Leave a comment

Posted by on July 1, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: