RSS

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் !

08 Jul

***நேற்று வரை தோளில் கைபோட்டிருந்த சிலர், இனிமேல் இவனுக்கு அலுமினிய கப்பில்தான் சாயா கொடுக்கணும் என்று இரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தால், சுயமானம் கொண்டிருப்பவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, வெளியில் கையேந்தாமல், தன் கையில் கிடக்கும் கடிகாரத்தை அடமானம் வைத்தாவது, பூபோட்ட பெரிய சைஸ் சிங்கப்பூர் கிளாஸ் வாங்கி வந்து, புதுப் பாயும் தரையில் விரித்து குடும்பத்தோடு அமர்ந்து மணக்க மணக்க சாயா குடித்து வைப்பது என்பது மனிதர்களிடம் இயல்பாகவே காணப்படும் ஒரு உணர்வின் வெளிப்பாடே. இது ஒரு பக்கமாக இருக்கட்டும், விஷயத்துக்கு வருவோம்.
***பலனான பல செய்திகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் இப்போது புரடியூஷர் என்கிற நிலைக்கு சென்றிருக்கிறார் போலும், அதுவும் டப்பிங் படம் ரிலீஸ் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார், இங்கே காப்பி பேஸ்டில் படம் மட்டுமே போட்டுவிட்டு நியாயம் என்று எதையோ சொல்லி வைத்து படம் மட்டும் காட்டிக் கொண்டிருப்பதை நொந்த மனசுடன் சொல்லத்தான் வேண்டும். குளிர் விட்டு போச்சு என்கிற சொல்லுக்கு அச்சம் கொண்டிருந்த மனதில் புரிதலின் தன்மை வந்து விட்டது என்பதே பொருளாய் இருக்கையில், இங்கே குளிர் விட்டுப் போன சிலருக்கு, சூட்டுக்கு பதில் வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
****வாழ்க்கைப் பாதையில் சக மனிதர்களும் தன்னோடு பயணிப்பதையே விரும்பாத இன்னும் சிலர், இரவோடிரவாக ஜல்லியும் மண்ணும் குவித்து, விடியும் காலை தொழுகைக்கு பின்னர், பார் பார் எனச் சொல்லி புதிய தார் ரோட்டில் பாடி பில்டிங்குக்கான நடை பயிற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
****நேற்றுவரை நடைபாதை வாசிகளோடு பவ்யமாய் பயணம் செய்த சராசரி மனிதர் ஒருவர், கௌண்டரில் டிக்கட் எடுத்து, உப்பரிகை ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு, பாதையில் நடந்து சொல்வோரை எல்லாம் பார்த்து, இவர்களதான் நான் கேள்விபட்ட பூலோக மானிடர்களா என்று கண்கள் இரண்டையும் விரிய திறந்து வைத்து தன் அவ்வளவு பெரிய ஆச்சரியத்தை; பாவம் தன்னை நம்பி இருக்கும் அந்த ஒற்றைப் பெண்மணியிடமும் மிரளும் மழலைகளிடமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
****ஒரு தோழிக்கு இன்னமும் உலக மயக்கமே தெளியவில்லை என்கிற நிலையில் இன்னொரு தோழி பொய்களைக் கொண்டே ‘மெய்மாளிகை’ ஒன்றை அவசர அவசரமாக கட்டிக் கொண்டிருக்கிறார், காரணமாக ரமலானுக்குள் கட்டி முடித்து விட்டால் கூடுதல் புண்ணியமாம். சுவரை தாண்டி உள்ளே வந்து யாருக்கும் சொல்லி விடாதீர்கள் காக்கா…காக்கா…என்று காதில் இரகசியம் சொன்னவர் ஒருவர், இன்றைக்கு கா..கா….என்று இரைந்து கரைந்தே அவரின் மா தவ நிலையை பரகசியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
***ஒவ்வொருவருக்கும் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில், சாம்பிராணியின் சுகந்த வாசமும், மூலைகளில் இருந்து கரிசனமாக ஓதப்படும் வேத வசனங்களும், தொண்டை நனைய தரப்படும் புனித நீரின் சில மொடக்குகளும், சற்றே கரகரத்த மூச்சு அப்படியே அடங்கிப் போவதுமே கடைசி நிலை என்று பிரதானப்பட்டிருக்கும் யதார்தத்தில், அதையெல்லாம் மறந்து; இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது வளைந்து நெளிந்து செல்லும் எங்களுக்கான நீண்ட வாழ்வுப் பாதை என்று கைகாட்டி, மூச்சடைத்து போகச் செய்யும் சாட்டங்களை இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பது என்பது – சாபமா, வரமா?
***எப்படியோ எல்லாமும் இருந்து கொண்டிருந்தாலும், மனிதர்களின் நிலையும் இறைவனின் கருணையும் இதோ இப்படியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது……..

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை ஒருவன் !

குறிப்பு- நான், நீ, அவன், இவன், நண்பர், தோழர், தோழியர், என்பதெல்லாம் குணம் கொண்டிருக்கும் குறியீடுகளாகவே அன்றி தனி ஒருவரென்று இங்கே யாருமில்லை

10858410_509656449177069_5663572308532446822_nRaheemullah Mohamed Vavar
Advertisements
 
Leave a comment

Posted by on July 8, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: