RSS

10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்; 1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடைகள். உருப்படுமா நாடு?

11 Jul

இந்த அரசின் கேடு கெட்ட மக்கள் நலப்பணியை அதன் கன்னத்திலேயே அப்பி வெட்கித் தலை குனியும் அளவுக்கு வாட்ஸ் அப்பில் வந்த பதிவு இது.

ரோஷமுள்ளவர்களும் தங்கள் சந்ததியினரின் நலமான எதிர்காலத்தை விரும்புவோரும் கேடு கெட்ட அரசியலை எதிர்ப்போரும் இதனைத் தங்கள் பக்கத்தில் மீள்பதிவு செய்வதை எதிர்கொண்டு விழைகின்றேன்.

எத்தனைபேர் தங்கள் பக்கத்துக்கும் பதிவுக்கும் உயிர் கொடுக்கிறவர்களாக இருக்கின்றார்கள்? என்பதையும் இதன் மூலம் கண்டு கொள்வோம்

வெட்டி அரட்டையைச் சற்றே தள்ளி வைத்து நம் மாநில மக்களின் நன்மைக்கு இதனை உங்கள் பக்கத்தில் பங்கீடு
(Share) செய்வது செழுமை மனம் கொண்டவர்களின் கடமை.

//நமது மாநில அரசின் இன்றையை நிர்வாகத்தைக் காணீர்!
————————————————
*கண்ணோட்டம்@ டாஸ்மாக்.

©தமிழ் நாட்டில்
4042 நூலகங்கள் இருக்கு, ஆனால் 6824 டாஸ்மாக் கடைகள் இருக்கு!

📖
நான் படிக்கவா?
அல்லது
🍸
குடிக்கவா?

10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்;
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடைகள். உருப்படுமா நாடு?

உணர்ச்சியில்லையா மக்களுக்கு?

காய்ச்சி விற்றால் கள்ளச் சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா?

இந்த வருஷம் இவ்வளவு
பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
வாகனங்கள் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
சாராயம் விற்கணும்னு தீர்மானம் அது தமிழ் நாடு.

இது நாடா? சுடு காடா?

குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்;

போதைல வண்டி ஒட்டுனா
போலீஸ்க்கு வருமானம்..

அடிபட்டா
ஆஸ்பத்திரிக்கு வருமானம்..

குடிக்கிற உங்களுக்கு மிஞ்சுவது
அவமானம் மட்டுமே..!

காலியான சாராய பாட்டில் சொல்கிறது:

“இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி…!”

டாஸ்மாக்கினாலேயே பார்டர்
மார்க்கில் தத்தளித்துக் கொண்டு பாஸ் காட்டிக் கொண்டிருக்கும் கேடு கெட்ட ஆட்சியைச் செய்வதில்
சாதனை என்பதா பெருமை?

தட்டிக் கேளுங்கள் நண்பர்களே

இதனை முடிந்த அளவுக்கு குழுக்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

இப்படிக்கு
உங்களின் 🚶ஒருவன்//

11737913_1117429904953313_7393341122098236954_nKrishnan Balaa
 
Leave a comment

Posted by on July 11, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: