RSS

இதுதான் காதல் என்பதா….?

16 Jul

11709247_868981409862691_2245436584443064089_n11138126_868982156529283_8630481034110776855_n11143347_868997503194415_986222021245577722_nஉன்னோடு நானும்
என்னோடு நீயும்…
உன்னதம் என்பது இதுதானா…?

எனக்கு மட்டும் புரிவது போல்
நீ பேசும்
இரகசியங்களில்
கசிந்து கரைகிறேன்.

எத்தனைப் பெரிய
இழப்பு ஏற்பட்டிருக்கும்,
உன் உறவை நான்
உளம் கொள்ளாதிருந்திருந்தால்…

காதலிக்கத் தெரியாதவன் நான்
நீயோ
காதலால் கருணை செய்தாய்
கருணையால் காதல் செய்வாய்…

தாள் பணிந்து கெஞ்சுவேன்
நீ என்
தலை நிமிர்த்திக் கொஞ்சுவாய்..

காதல் இடம் மாறினால்,
காதல் தோல்வி என்றால்
காதலே பொய்;
காதலில் தோற்கக் கூடாதெனில்
காதலிக்க வேண்டியது
உன்னை மட்டுமே…

பட்டப் பகலிலும் நள்ளிரவிலும்
வெட்கப் படாமல்
உன்னைத்தான் காதலிக்க முடியும்…

நேர காலம் பாராதது, நம்
நெருக்கம்.

கொஞ்சமே தெரிந்துகொண்டு
நான் காதலித்தால்,
எல்லாம் தெரிந்துகொண்டு
நீ காதலிக்கிறாய்;
உன் காதல்,
உன்னைப் போலவே ஒப்பற்றது.

எந்தத் தகுதியும் இல்லாத என்னை
எல்லாத் தகுதியும் உள்ள நீ காதலிக்கிறாய்…
இதுதான் காதல் என்பதா….?

—-ஏம்பல் தஜம்முல் முகம்மது.

282545_125752854185554_5504512_nYembal Thajammul Mohammad
 
Leave a comment

Posted by on July 16, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: