RSS

கருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க!

02 Aug

-      327 02-41qqபடைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை! சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை! இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்றுக்கு நடுவே தடி கொண்டு ஆடுதலும், அடுப்பு ஊதுதலும் விமரிசையாய் நடக்கின்றன.

பிணக்குவியலினூடாக உயிரோடு உடல்கள் விரல்நீட்ட மாட்டதா? நப்பாசையுடன் வாக்குத்தேடுவோர் அலைவது போல் இதழொன்று பணி செய்கிறது. திருமண அழைப்புக்காக, வலிமா விருந்துக்காக, மௌத்துக்க்£க, கத்தத்துக்காக ஊர் நபர்கள் ஒன்று கூடிப் பேசுவதற்காக ஒரு இதழ் பைத்துல்மால் பொதுப் பணத்தில் உலாவந்து குளிர்காய்கிறது.

திருமணம் நடக்கப் போவதாக ஒரு அறிவிப்பு. அடுத்து திருமண அழைப்பிதழ் அப்படியே பதிவு. பின்னர் திருமணப் படங்கள் பதிவு. கலந்து கொண்டமைக்கு நன்றி கூறிப் பதிவு. இதற்காக ஒரு இதழ். மற்ற சமூகத்தவரிடம் மதிப்பு ஈட்டித்தருமா இப்போக்கு?

32 மாவட்டங்களில் ஓரிரு ஊர்களில் மட்டும் ஒன்று கூடிப் பேசியதாகப் படங்களுடன் பதிவு. பின்னர் அவ்வூரின் தேவைக்காக போராட்டம் கூறி ஒரு பதிவு. நாட்டமைகளின் சலிக்காத பதிவுகள்.

விதிமுறையிருந்தும் வீதியோரம் நடந்து செல்லும் பாதசாரி உயிருக்கு உத்தரவாதமில்லை! கூறுவது போன்று பதிவுகள். படித்ததைப் படிப்பதற்காக ஒரு செய்தி ஏடு. வேற்றோர் இட்ட வெக்கையின் சாம்பலை அள்ளி வந்து தணலாக்கும் முயற்சிகள். 2 இலட்சத்து 75,000/& கோடி ரூபாய் மத்திய திட்டக்குழு ஒதுக்கியிருக்கிறது. சமூக நலத்திட்டங்களுக்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தன் சமூகத்தில் நலிந்தோருக்கு எவ்வளவு கிடைக்கும்? கொடுக்கப் போகின்றனர். கண்காணிக்கலாம். பெற்றுத்தரலாம்.

பலர் தரும் பணத்தில் இதழ் நடக்கிறது. இதழ், இயக்கம் சார்ந்திருக்கும் அனைவருக்கும் அதனுள் பங்கிருக்கிறது. 100 பேருடைய பங்குகளை 25 பேர் மட்டும் மீண்டும், மீண்டும் அனுபவிக்கின்றனர். 75 பேர் வெளியே நின்று பொறுமிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். அவரவருக்கும் பிரித்து 4 வரி தரலாம். கால்பக்கம் தினம் ஒருவருக்கு ஒதுக்கலாம். தரமறுக்கும் போது தனியமைப்பு காண்கின்றார். தனி இதழ் தருகின்றார். முன்னவர்கள் செய்த தவறை தாமும் செய்கின்றார்.

பொதுப் பணத்தில் தம்மை முன்னிறுத்திக் காட்டுவதைக் கை விட்டு சமூகத்தை முன்னிறுத்தலாம். கல்விக் கடன் கொடுத்து முடித்து விட்டதாக கணக்கு காட்டிவிட்டனர். சொத்து ஜாமீன் இல்லாது தர மறுக்கின்றனர். அலைய வைப்பதன் மூலம் தாமே ஒதுங்கி ஓடும் நிலையை கைக் கொள்கின்றனர். அனுபவித்தோரின் வாக்குமூலம். இறைக்கு அஞ்சி களப்பணி மூலம் உண்மையைப் பதிவு செய்யலாம். ”இதழ் நடத்துவதன் பொருட்டு வலியவருக்கு சாமரம் வீசலாம். சதா நேரமும் வீசினால் அலுப்புத் தட்டும். அநாகரீகமாகக் காட்டும்”.

பின் தங்கிய மக்களின் வாழ்வியலுக்காக பக்கத்தை ஒதுக்கலாம். 300க்கும் மேற்பட்ட சீனப்பொருட்கள் இறக்குமதியால் சிறு உற்பத்தியாளர் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெரு முதலாளிகள் சிறு வணிகத்திற்குள் புகுந்ததால் சிறிய கடைகள் தூங்கி வழிகின்றன. இடைநிலை மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொண்டு அவர்கள் குறித்து பதிவு செய்யலாம். சென்னை நகரப் பகுதியில் நடுத்தரமக்கள் வசிக்க வியலா வகையில் வாடகை ஏற்றப்பட்டிருக்கிறது. அசுரத்தனமாக கூடுதலாகியுள்ள மனைவிலை காரணமாகக் காட்டப்படுகிறது. இது குறித்து ஒருவரும் பூரணமாகப் பதிவு செய்யவில்லை.

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது, 28லிருந்து 38 வயது வரை முஸ்லிம் பெண்கள் படித்தவர்கள் முதிர் கண்ணிகளாக முடங்கிக் கிடக்க, செல்வந்தத் திருமணத்தை டமாரம் அடிக்க ஒரு இதழ் நடத்துவோம். பொதுப் பணத்தை தினந்தோறும் மண்ணாக்குவோம், இவ்வாறான இயங்குதலை புரவலர்கள் அனுமதித்தலாகாது. அனுமதித்தால் அப்பணம் நல்ல வழியில் ஈட்டப்பட்டதல்லவெனும் எண்ணம் கருத்தரிக்கச் செய்யும். கருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் அவசியம். அவ்வெண்ணமே சுவனத்துக்கு ‘துஆ’ செய்யும்.

-சதாம், முஸ்லிம் முரசு ஜூலை 2013

source: http://jahangeer.in/

http://nidur.info/old/

Advertisements
 
Leave a comment

Posted by on August 2, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: