RSS

புழுதிக்குள் புதைந்த புத்தியை புத்தகங்கள் புனிதப்படுத்துகின்றன – ஒரு வாசிப்பு அனுபவம்

12 Aug

readingஒரு புத்தகத்தை இருவரால் ஒரே போல் வாசிக்க இயலாது, அவ்வாறு வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது

– ஜிப்ரில்

மனித வரலாற்றை சமூக வியலாளர்கள் இரண்டாக பிரிக்கிறார்கள் ஒன்று வரலாற்றிற்கு முந்தய காலம்( pre- historic period) இது பதிவு செய்யபடாத மனித வரலாற்றின் காலம் மற்றொரு பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் காலம்(குகைஓவியமாக,கல்வெட்டுகளாக,தோள்களில்,ஓலைகளில்,என்று இன்றைய புத்தகம்,மின்னணு ,புத்தகம், என்று வளர்ந்து பல பரிமானாங்களை அடைந்து நிற்கிறது)

அதே போல் ஒரு மனிதனின் வரலாற்று காலம் என்பது அவன் நியாபகத்தில் நிறைந்து இருக்கும் காலத்தில் இருந்தே தொடங்குகிறது, புத்தகம் குறித்தான எனது அனுபவங்களும் அப்படியே.

இயல்பாகவே எனது வீடுகளில் புத்தகங்கள் நிறைந்து இருந்தது எனது பெற்றோர் சேமித்து வைத்தவை, அவைகள் என்ன பத்தகங்கள் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் எல்லா புத்தகங்களும் பெரிது பெரிதாக இருக்கும்,

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே என் பெற்றோர்கள் என்னை விடுதியில் சேர்த்து விட்டார்கள் (காரணம் என் தந்தை, என் தயார், தங்கை அனைவரையும் குவைத்திற்கு அழைத்து கொண்டார்) நான் என் தாயின் தயார் இடம் வளர வேண்டிய சூழல், என் தந்தை நான் வீட்டிலிருந்து படிப்பதை ஏற்க மறுத்திருக்கிறார் காரணம் தெருக்களில் ஆடு மாடுகளை கண்டால் அது எதுவரை செல்கிறதோ அதுவரை பின்தொடர்ந்து சென்றுவிடுவேனாம், எனை தேடுவதே பெரும் வேலையாக இருந்திருகிறது) அந்த விடுதியில் எனக்கு கிடைத்த இரண்டு ஆசிரியர்கள் ஒருவர் ஹளிகுள் ஜமான், மற்றொருவர் சார்லஸ் கவிதாசன் அய்யா, ஒருவர் எனக்கு மார்க்கத்தை ஊட்டினார் மற்றொருவர் மார்க்சியத்தை ஊட்டினார்.

சார்லஸ் கவிதாசன் அய்யா எங்கள் ஊர் என்பதால் இயல்பாகவே அவருடன் ஒட்டிக்கொண்டேன், நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளியில் ஒரு பேச்சு போட்டியில் பேச ஹளிகுள் ஜமான் சார் என்னை தேர்ந்தெடுத்தார் தலைப்பு “என்னும் எழுத்தும்” என்பதாகும், என்னையே உரையை தயார் செய்ய சொன்னார், அன்று தான் நானாக படிக்க தொடங்கியதாக நினைவு இருக்கிறது, உரையை தயாரித்தேன், ஹளிகுள் ஜாமான் சார் அந்த உரையை செழுமை படுத்தினார், இறை உதவியால் முதல் மேடை முதல் பரிசு கிடைத்தது.

விடுமுறை நாட்களில் கவிதாசன் அய்யா உடன் ஊர் சுற்றுவது என்னுடைய வழக்கம், அவர் கையில் புதிய ஜனநாயகம் பத்திரிகைகள் இருக்கும், அவர் படித்து சொல்லி தருவார் ,என்னை படித்து பிறருக்கு சொல்லி தரச்சொல்வார்,கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்புகள் இவ்வாறு தொடங்கியது, நான் வாசிக்க தொடங்கியது பொதுவுடமை சார்ந்த புத்தகங்கள்,கூடவே ஜமான் சார் வழங்கிய இஸ்லாமிய புத்தகங்களும்.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கென்று புத்தகங்கள் சேர தொடங்கியது அதை அடுகுவதற்காக தந்தையின் புத்தக அலமாரியையே பயன்படுதிக கொண்டேன், வாய்ப்புகள் கிடைக்கும்போது என் தந்தையின் புத்தகங்களையும் வாசிக்க தொடங்கினேன் என் தந்தை சேமித்திருந்தது எல்லாம் திராவிட இன வரலாற்றை மையமாக கொண்டது.

அண்ணாவின் ஆரியயமாயை, திராவிட நாடு
கலைஞரின் – கலைஞரின் கடிதம், நெஞ்சுக்கு நீதி
விடுதலை புலிகளின் – தமிழ் ஈழமே எம் தணியாத தாகம்
கணேசன் எழுதிய – ரெட்டை நாக்கு பார்பனன் சோ , பெரியாரின் புத்தகங்கள் என பட்டியல் அதிகம்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது என் தந்தை எனக்கு முதலில் வாங்கி தந்த புத்தகம் என்றால் பேராசிரியர் மார்க்ஸ் எழுதிய – ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம், ஆட்சியில் இந்துத்துவம், பலநெடுமாறன் எழுதிய, புத்தகங்கள்
ஐன்ஸ்டீன் முதல் ஹாக்கின்ஸ் வரை -(இதை யார் எழுதியது என்ற நினைவில் இல்லை) இவைகள் எல்லாம் என் பள்ளி பருவத்தை உன்னதமானதாக்கிய புத்தகங்கள்.

உமர் முக்தார் படம் பார்த்து உந்தப்பட்டு பதினைந்து பதினாறு வயதுகளில் ஊரில் இருக்கும் இலைஞர்ளை ஒருங்கிணைந்து உமர் முக்தார் இலைஞகர் கமிட்டி என்று ஒன்று உருவாக்கி உமர் முக்தார் நினைவு நூலகம் அமைத்தது, பின்பு அந்த நூலகம் சமூக விரோதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டது நான் சேமித்து வைத்திருந்த அநேக நூல்கள் அதில் எரிந்து சாம்பலாகி விட்டது என புத்தகங்களுடனேயே எனது இளமை கழிந்தது.

பின்னர் கல்லூரி காலங்களில் தான் வார பதிரிகைகள் படிக்க நேர்ந்தது, அதில் கட்டுரை எழுதியவர்களின் எழுத்துகளால் கவரப்பட்டு அவர்களுடைய புத்தகங்களை வங்கி படிக்க தொடங்கியது, ப.ராகவன் எழுதிய “நிலமெல்லாம் ரத்தம்” பிடித்து போய் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட அநேக புத்தகங்கள் வாங்கி படித்தது,
மதன் எழுதிய மனிதனுக்குள் மிருகம், வந்தார்கள் வென்றார்கள், கவிக்கோ அப்துர் ரஹ்மானின் பித்தன், பால்வீதி, பூப்படைந்த சப்தம், ஆலாபனை, தபுசங்கரின் உறங்கும் அழகி, தேவதைகளின் தேவதை, வைரமுத்துவின் கருவாச்சி காவியம்,கள்ளிக்காடு இதிகாசம், தண்ணீர்னிதேசம், இன்னொரு தேசிய கீதம் கண்ணதாசன் பதிப்பகத்தின் கலில் ஜிப்ரானின் கவிதைகள் என்று கால சூழ்நிலைக்கு தகுந்தார் போல் என் புத்தகங்களின் பட்டியலும் மாறுபட்டது வாசிப்பும் அதிகம் ஆகியது.

இவைகள் எல்லாம் என் தேடலாக இருக்கும் போது இறைவனின் நாட்டம் வேறொன்றாக இருந்தது.

ஒரு நாள் மாலை மகரிப் தொழுகை முடித்து வெளிவரும் போது பள்ளியில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது அது நாள் வரை நான் படித்தவைகளையும் புரட்சியாளர்களுக்கு எல்லாம் மாறுபட்ட புரட்சியாளர்களையும் , அவர்களின் கருத்துகளை பற்றியும் விவாதிக்க நேர்ந்தது. எனது எதிர்கால பயணமும் அங்கே தீர்மானிக்கப்பட்டது. ஆம் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்தே என் எதிர்கால பயணத்தை தீர்மானித்துக் கொண்டேன்.இன்று வரை அது தொடர்கிறது இனியும் தொடரும் இறைவன் நாடினாள்.

அந்த சந்திப்பிற்கு பின்பு நான் வாசிக்கும் புத்தகங்களும், என் பார்வையும் என் வாசிப்பு தளமும் விசாலமானது, என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் செய்யது குதுப்பின் மைல்கற்கள், மௌலானா மௌதூதியின் இஸ்லாமிய கல்வி என இலக்கிய சோலை பதிப்பகத்தின் அநேக புதகங்களை வாசித்து முடித்தாகிவிட்டது.

ஒரு விபத்தாக குவைத்திற்கு வந்ததும் குவைத்தில் இஸ்லாமிய புத்தக நிலையம் என்று ஒன்றை தொடங்கியது குவைத்தில் அறிமுகம் ஆன சகோதரர் ரவூப் செயின் எழுதிய புத்தகங்கள் என்று புத்தகங்களுடன் தொடர்ந்து பயணித்து கொண்டிருகேறேன் இப்போது ராமாயணத்தையும்,மஹாபாரதத்தையும் கூட படிக்க துவங்கி உள்ளேன். ஜாஹிலியாவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா.

தற்பொழுது இணையம் வழியாக நட்பில் கிடைத்த சகோதர்கள் மூலம் அவர்களின் உந்துதலால் வாசிப்பு பழக்கம் எழுதும் இடத்தை அடைந்திருக்கிறது.

நான் படித்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். நான் வரலாற்று புத்தகங்களை படிக்கும் போது அந்த வரலாற்றில் வாழ்கிறேன்,அந்த வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய முனைகிறேன்.கவிதைகளை படிக்கும் போது அந்த கவிஞரின் கற்பனைக்குள் சஞ்சரிததுண்டு.புரட்சியாளர்களின் வரலாறை படிக்கும் போது அந்த புரட்சியாளர்களின் கருத்துகளை நான் வாழும் சூழலில் எவ்வாறு அமல் படுத்தலாம் என பொருத்தி பார்த்திருகின்றேன்.

இவைகள் எல்லாம் எதற்காக, மிகப்பெரியதோர் மலையை புரட்ட அனுதினமும் நாம் அசைக்க வேண்டிய துரும்புகள் ஆம் புத்தகங்கள் இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பதாலேயே, நூல்கள் நம் நுண்ணறிவை உசுப்பி விடுகின்றன புழுதிக்குள் புதையுண்ட புத்தியை புத்தகங்கள் புனிதப்படுத்துகின்றன ஒவ்வொரு இரவும் எனக்கு முதல் இரவுதான் புதிய புத்தகங்களின் புதிய பக்கங்களுடன் படுத்துறங்குகையில்.

– ஜிப்ரில்
http://www.thoothuonline.com/archives/72633

Advertisements
 
Leave a comment

Posted by on August 12, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: