RSS

சுதந்திரம் என்பது வரம்பு மீறி வன்முறைகளில் ஈடுபடுவதற்கல்ல;

15 Aug

11911124_1138312462865057_1087473061_nசுதந்திரம் என்பது
வரம்பு மீறி வன்முறைகளில் ஈடுபடுவதற்கல்ல;

சாதி வெறிகளைத்
தூண்டி
நமக்குள் இருக்க வேண்டிய
சமூக ஒற்றுமையைத்
துண்டித்துக் கொள்வதற்கல்ல;

பொருந்தாத புரட்டுக் கோஷங்களை
வேள்வித் தீபோல் வளர்த்துக் கொண்டு
மூட மதி கொண்டோர் கூட்டத்துக்கு
மந்திர ஜெபம் சொல்லி
மடையர்களாய்.மாக்களாய் மாற்றி அரசியல் செய்வதற்கல்ல;

புத்தியாலும் ஒழுக்கத்தாலும்
உயர்ந்து வாழ்பவனைப் பார்த்து
எதிர்ப்பும் எரிச்சலும்
கொள்வதற்கல்ல;

உழைக்காமல்
‘இது மக்களுக்கான அரசாங்கம் ‘ என்ற உணர்வை மறந்து
சாதியின் பெயராலும்
சண்டாளத்தனத்தின் திமிராலும்
சம்பளத்தைக் கூட்டிக் கேட்டு குப்புறப்படுத்து கொண்டு போராட்டங்கள் செய்வதற்கல்ல;

மனச்சாட்சி உள்ளவன் உழைக்க,
அது இல்லாதவன் லஞ்சம்
பெற்றுக் கொண்டு பிழைக்க,

‘லஞ்சம் வாங்குவது குற்றம்; லஞ்சம் கொடுப்பது அதைவிடக் குற்றம் ‘
என்று விளம்பரப்படுத்திக் கொண்டே லஞ்சத்தை ஒவ்வொரு அரசுத் துறையிலும் வெட்கமின்றி நடைமுறை படுத்தியது போலவே –

‘குடி நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடு’ என்று சட்டப்படி விளம்பரப்படுத்திக் கொண்டே 90 சதம் ‘குடி’ மகன்களை வளர்த்து 100 சத வீத எதிர்கால சந்ததியினரை போதையில் உற்பத்தியானவர்களாக்கும் நாசகாரத்தை அரசே செய்வதற்கல்ல;

எது தர்மம்? எது நாடு? என்பதை உணராது கோடி கோடி செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்காக நாட்டைச் சுரண்டும் கொள்ளைக் கார அரசியல்வாதிகளின் பின்னே அணிவகுத்துக் கொண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் வைப்பதற்கல்ல;

‘கல்வித் தொண்டு’ எனும் பெயாரால் அறக்கட்டளைகளை புற்றீசல்போல் வளர்த்துக் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளை இடும் சமூக விரோதிகளை கல்வி வள்ளல்களாய் வளர்க்க அல்ல;

‘நாடு எங்கே போகிறது?’
என்பதில் கவலை கொள்ளாமல்
‘நாம் எங்கே போக வேண்டும்?’
என்பதில் மட்டும் கண்மூடித் தனமான வேகத்தில் நடந்து நம் ஒருவருக்கொருவர் பொறாமையும் பொச்சரிப்பும் கொள்வதற்கல்ல.

‘பெண்ணுரிமை’ எனும் பித்தலாட்டக் கொள்கையின் பெயரால் பெண்ணுக்குள்ளும் ஆணுக்குள்ளும் பித்தம் பெருக வைத்து பாரம்பரியக் குடும்ப உறவுகளைச் சிதைத்துக் கொள்வதற்கல்ல!

ஆனாலும் இவை யாவும் இங்கே நிஜம்.

இந்த நிஜத்தில் ‘ இந்திய சுதந்திரம் ஏற்றமுடைத்து’

என்று பெருமைப் படுவது
மனசாட்சியை அடகு வைத்து விட்டு போலித்தனமான ஒப்பனையில் ஊர்வலம் வருவதுபோல் மனம் கூசுகிறது.

உண்மையான சுதந்திரம் எழுச்சி கொள்ளும் வகையில் இந்தச் சுதந்திர நாள் சிந்தனை வளர்க!

இவண்-
கிருஷ்ணன்பாலா
15.8.2015

11737913_1117429904953313_7393341122098236954_nKrishnan Balaa
 
Leave a comment

Posted by on August 15, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: