RSS

நான் காணும் உகாண்டா ….!

19 Aug

நான் காணும் உகாண்டா ….!
by- ராஜா வாவுபிள்ளை

11846524_1707205999503190_6941329255612067189_n11855858_1707206042836519_6210546323234533958_n11873500_1707206069503183_2306300876646624026_n

ஆங்கிலேயர் வருகை.

200 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக ஆங்கிலேயர் ஸ்பீக் என்பவர் நைல்நதியின் நதி மூலம் கண்டுபிடிப்பதற்காக வந்தார் அப்போது புகாண்டா அரசாட்சியின் எல்கையில் வந்தபோது கபாகாவின் காவலர்களால் இங்கிருந்து ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் கபாகாவின் அனுமதி பெறவேண்டும் என்று எடுத்துரைக்க அவரைக்காண அவரது அரசவைக்கு ஸ்பீக் கும் அவரது குழுவினரும் அழைத்து செல்லப்பட்டனர்.
கபாகாவை கண்டு அனுமதியும் பெற்று அங்கிருந்து 60 மைல் தூரத்தி லேயே அன்று நலுபாலே என்று அழைக்கப் பட்ட இன்று லேக் விக்டோரியா என்று அழைக்கப் படுகின்ற உலகத்தின் இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் ஏரியில் இருந்தே நைல்நதி உருவாகிறது என்ற உண்மையை உலகின் மற்ற பகுதியினருக்கு அறிவித்தார்.

ஜோஹ்ன் ஹன்னிங் ஸ்பீக் ற்கு பிறகு ஜேம்ஸ் அகஸ்டஸ் கிராண்ட் மற்றும் ஹென்றி மோர்டன் ஸ்டேன்லி ஆகியொரூம் வந்தனர்.
இவர்கள் யாவருமே கிருத்துவ மிசநரிகளுக்கு அழைப்பு விடுத்தனர் அவர்களும் வந்தேறினர்.

இந்த காலகட்டத்தில் புகாண்ட ராஜ்யத்தின் ராஜாவாக இருந்தவர் முட்டேசா 1 ஆவார்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னரே அரேபியர்களின் தொடர்பு இருந்தது என்றாலும் அவர்கள் ஆப்ரிக்கர்கள் அருமை அறிந்திராத தங்கம் யானைத் தந்தம் போன்ற வற்றையும் வியாபார பண்டமாற்று செய்துவந்தனர் மற்றும் அடிமை வியாபாரமும் நடந்தது. ஆங்கிலேயர்களும் வியாபாரமே செய்தார்கள் ஆனால் வித்தியாசமாக செய்து அடிமைப் படுத்தினார்கள். கிருத்துவ மிசனரிகள் எவ்வளவோ முயற்சித்தும் கபாகா மதம் மாறவில்லை. ஆனால் கபாகா எந்த மதத்தையும் சார்ந்து ம் இருக்கவில்லை.

1884 ம் ஆண்டு முட்டேசா-1 வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார்.
அவரது மகனும் பட்டத்து இளவரசனுமான முவங்கா-2 கபாகாவாக முடிசூடினார்.

(தொடர்- 2)
ராஜா வாவுபிள்ளை

e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d-e0ae85e0aeaae0af8de0aea4e0af81e0aeb2e0af8d-e0ae95e0aebee0aea4e0aeb0e0af8dராஜா வாவுபிள்ளை

 

One response to “நான் காணும் உகாண்டா ….!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: