RSS

வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் ஹர்திக் படேல்!

28 Aug

11885354_10207448995414045_3774986956317867225_nவெளிப்படையாகவே சொல்லிவிட்டார் ஹர்திக் படேல்!
“இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுங்கள் அல்லது எல்லோரையும் அதன் அடிமைகளாக்கி விடுங்கள். அதாவது எல்லோருக்கும் ஒதுக்கீடு தாருங்கள்” என்பது அவரது இன்றைய முழக்கம். மூன்றே மாதத்தில் தலைவராகி லட்சக்கணக்கானவர்களைத் திரட்டி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்த 22 வயது இளைஞர்.

அவரது ஜாதியைச் சேர்ந்த முதல்வர் ஆனந்திபென் படேலை பொம்மை என்கிறார். அதிகாரம் வேறெங்கோ இருக்கிறது என்றும் சாடுகிறார். இத்தனைக்கும் இவர் தலைமையிலான போராட்டத்துக்கு ரத்தினக் கம்பளத்தை விரித்து ஆதரவு தந்தது ஆனந்திபென் அரசு. மிகவும் வறியவர்களான இந்தப் போராட்டக்காரர்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு. மேலும் போராட்டம் நடந்த மைதானத்துக்குக கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்குத் தந்தது அவரது அரசு.
கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பன்மடங்கு முன்னேறியது அவரது சமூகம் என்பதற்கும் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில்தான் குவிந்திருக்கிறது என்பதற்கும் சான்றாக, ஏராளமான விவரங்கள் அமுதசுரபிபோல கொட்டிக் கிடக்கின்றன. புதிய ஆதாரங்களைத் தேடித்தர வேண்டிய அவசியமில்லை.

‘இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப்போட்டியிலும் ஏன் இடங்களைப் பெறுகிறார்கள்’ என்பது அவரது முக்கியமான ஆதங்கம். பொதுப் பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற பாலபாடம் தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் கவுன்சிலிங்குக்கு வரும் பாமரத் தந்தைகளுக்கும் தெரியும்.
பொதுப் பிரிவிலும் அப்படியெத்தனை இடங்களை தாழ்தத்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் ‘கபளீகரம்’ செய்துவிட்டனர்; தங்களது பங்கு எவ்வளவு குறைந்துவிட்டது என்பதற்கான புள்ளிவிவரங்கள் போராட்டக்காரர்கள் சார்பில் இதுகாறும் வெளியிடப்படாதது ஏன்? இத்தனைக்கும் தமிழகம், கர்நாடகம் போன்று 69, 73 சதவீத ஒதுக்கீட்டை கொண்டுள்ள மாநிலம் அல்ல! 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாநிலம் குஜராத்.

‘நீங்களாக முன்வந்து இடஒதுக்கீட்டைத் தந்துவிட்டால் பெரியமனதோடு ஏற்றுக்கொள்வோம்; இல்லாவிட்டால் அதைத் தட்டிப்பறிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றொரு எச்சரிக்கை! முதல்அமைச்சரே மேடைக்கு வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுச்செல்ல வேண்டும் என்ற நிபந்தனை வேறு!

ஒரு சாதியினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால் அதற்கான தரவுகளை அம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். உரிய ஆய்வுகளைச் செய்து அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கும். இறுதி முடிவை அரசு அறிவிக்கும். ஆனால் இந்தப் புதிய போராட்டக்காரர்கள் இந்த எளிய நடைமுறையைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. போர்க்களத்தின் உச்சியில் நின்று மனுவைப் பெற்றுச் செல்லுமாறு முதல்வருக்கு உத்தரவிடுகிறார்கள்.

“வெளியில் சொல்லப்படுவதைப் போன்று வளர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை எதார்த்தத்தில் குஜராத்தின் நிலைமையோ வேறு. உத்தரப் பிரதேசம், பிகாரைப் போன்ற பின்தங்கிய நிலைமைதான். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். வேண்டுமானால் நீங்களே நேரில் போய் உறுதி செய்து கொள்ளுங்கள்” என்கிறார் “The reality in Gujarat is vastly different from what is being projected. It is very much like Uttar Pradesh and Bihar. Thousands of farmers have committed suicide. Go to the rural areas to see [it] for yourself.” அவரது கருத்து நியாயமானதாகக்கூட இருக்கலாம்.

எனக்கு நியாயம் செய்யுங்கள் என்று கேட்பதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்குக் கிட்டாதது எவருக்கும் இருக்கக்கூடாது; அதையும் ஒழித்துக் கட்டுங்கள் என்று சொல்வதில் உள்ள நியாயம்தான் புலப்பட மறுக்கிறது.
பொருளாதாரத்தை, அரசியல் அதிகாரத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் பதிடார் படேல்களின் நிலையே பரிதாபம் என்றால், அங்குள்ள மற்றவர்களின் நிலை இன்னும் மோசமாக அல்லவா இருக்கும்?

11707578_10207026693856770_9041639219629269502_nGunaa Gunasekaran
 
Leave a comment

Posted by on August 28, 2015 in 1

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: