RSS

உன்னைப் போல குழந்தையாய் பிறக்க ஆசை.

30 Aug

Nibraasதத்தி தத்தி நடந்திடுவாய்
தடுமாறி விழுந்திடுவாய்.
விழுவது ஒன்றும் பாவமில்லை..
உனக்கு மனதில் ஒன்றுமில்லை..

தங்கம் கையில் இருந்தாலும்
தூரமாய் தூக்கி எறிந்திடுவாய்..
பிஸ்கட் மட்டும் கையில் வைத்து
அழகாக சுவைத்திடுவாய்..

கண்ணீர் சிந்தி அழுதிடுவாய்..
பிறரை அழ வைக்க மாட்டாய்..
விழுந்து விழுந்து சிரித்திடுவாய்.
பிறர் விழ சிரிக்க மாட்டாய்..

வாதும் சூதும் தெரியாது
வஞ்சகமும் புரியாது..
வாதமும் நீ அறியாதது..
பிடிவாதம் மட்டும் குறையாதது..

இனிப்புக்கும் கையை நீட்டுவாய்
நெருப்புக்கும் கையை நீட்டுவாய்..
நல்லது கெட்டது தெரியாது
அன்பு மட்டும் நிலையானது..

உனக்கும் கூட ஆசை உண்டு
நடக்கும் போது ஓசை உண்டு
உன் மொழிக்கும் பாஷை உண்டு
பேராசை மட்டும் உனக்கு இல்லை

குழந்தையாக இருந்து விட்டால்
விழுந்தாலும் சிரிப்பார்கள்..
எழுந்தாலும் சிரிப்பார்கள்..
சிரிப்பாய் சிரிக்க மாட்டார்கள்..

மறுபடி ஒருமுறை
உன்னைப் போல
குழந்தையாய்
பிறக்க ஆசை.

Saif SaifSaif Saif
 
Leave a comment

Posted by on August 30, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: