RSS

மகாபலிபுரத்தில் புத்தன்

31 Aug

11954645_709748505835736_5159476391727136291_nகேளிக்கைகள் அலுத்துப்போகும்போது
ஆசுவாசம் கொள்ள ஒரு மோனபுத்தன் சிலையை
வரவேற்பறையில் அமரவைத்தான் ஆல்பர்ட் சினோவா

பட்டப்பகலில் நீச்சல்குளத்தில்
கலவிக்கு உடன்படாத காதலிமீது கொண்டகோபத்தில்
விரல்கள் நடுங்க புகைபிடித்து ஊதினான்
மோனபுத்தனின் சாந்த முகத்தில்

நள்ளிரவுக் குடிபோதையில் புதிய நிலைகளுக்கு ஒத்துழைக்காத
அவள் பத்தாம்பசலித்தனத்தை இகழ்ந்து எள்ள,
கேத்தரின் ஒலூசா ஆத்திரத்தில் விசிறியெறிந்த கண்ணாடிக்குவளை பட்டு
உடைந்து சிதைந்தது புத்தனின் மூக்குநுனி.

போதையிறங்கி ஞானம் மிகைத்து ராசியான காதலர்கள்
கலந்தொருமித்து சங்கமமாயினர்
புராதன நிலையில் புத்தம்புதிய புத்தர்சிலை முன்.

மற்றபடி நேற்றிரவு கஞ்சா விற்ற துலுக்கானம்
இன்று காலை ஒரு புத்தனை விற்றான்.

11694954_685785164898737_3464662569035043561_nNisha Mansur

Advertisements
 
Leave a comment

Posted by on August 31, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: