RSS

Monthly Archives: September 2015

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை {முழு வடிவம்}

unnamedதினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார்

இலக்கியப் பரிசு

பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை

{முழு வடிவம்}

நாள் : 27.09.2015

இடம் : இராணி சீதை மன்றம், சென்னை

என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கும் என் உயிரினும் மேலான என்

தாய்மொழிக்கு வணக்கம். நான் என்றைக்கும் மதிக்கின்ற, வணங்குகின்ற தமிழர்

தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கும் வணக்கம். எனது இலக்கியப்

படைப்பினைப் பரிசீலித்து இந்த இலக்கியப் பரிசைப் பெறும் தகுதியைப் பெற்றுத்

தந்த பரிசுப் போட்டிக் குழுவின் நடுவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கின்ற

நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் மற்றும் தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஐயா

அவர்களுக்கும், பார்வையாளர்களாக வந்திருக்கின்ற பெருமக்களுக்கும், தமிழ்

மக்களின் போராட்டக் கருவியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் பத்திரிக்கை

தினத்தந்திக்கும் எனது வணக்கங்கள்.

இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை

உயர்த்துவதற்காகத் தரப்படுகிறது என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன்

வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன்.

திரைப்படத் துறையை தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என்

எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான்.

திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும்,

பரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு

மனநிறைவும், பெருமையும் இருக்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக

எழுத ஆரம்பித்தவன் இல்லை.என்னைச்சுற்றிலும் நிகழும் சம்பவங்களும்,அதனால்

எனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன். 1984

ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990 இல் திரைப்படத்துறையில்

ஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு

துறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும்,

தனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.

அவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா.

ஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக,

யாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிறேனோ, உலகம்

முழுமையும் உள்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம்

தினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on September 28, 2015 in 1

 

எது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும்

சண்டைகள், சத்தங்கள், ஆரவாரங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்ற அனுமானங்களின் மீது எமக்கு நம்பிக்கை குறைவு. மாறுபட்ட பார்வைகளைக் கொண்டவர்கள், பிரபலங்களோ அல்லது சாதாரணர்களோ, ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சமூகப் பிரக்ஞையுடன் தர்க்கங்களை முன்வைப்பதை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள்.

மக்கள் எளிதில் மறப்பதை நினைவூட்டவும், சொல்லப்படாத புள்ளிகளைத் தொட்டுச் செல்லவும், மறைபொருளாகப் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களில் வெளிச்சம் பாய்ச்சவும், இரு தரப்பு தர்க்கங்களுக்கு அப்பால், எது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும் எனக் கருதி வந்திருக்கிறோம். கூடுமானவரை அவ்வாறே நடக்கவும் முயன்றிருக்கிறோம்.

Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 25, 2015 in 1

 

Tags: ,

நோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் !

நாள்: 24 செப்டம்பர் 2015
உகாண்டா, கம்பாலா

ஒரு முக்கிய அறிவிப்பு !

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
அருளாளனவன் அருள் செய்திருக்கும் நம்முடைய இந்த உலக வாழ்வில், வாழும் வாழ்க்கையை நோயின்றி வாழும் வழிவகைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமே. எத்தனை எத்தனையோ நோய்கள் இங்கிருந்தாலும், உடலில் வேர் விதைத்து உயிரையே அறுவடை செய்யும் இந்த புற்று நோயே இன்றைக்கு உயிர் பலியில் உயர் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது புள்ளி விபரம் தரும் கணக்கு.

நோய் இல்லாதவன் அல்லாஹ் அவன் ஒருவனே எனினும்; வந்த நோய்க்கு அதற்கான மருந்து உட்கொண்டு அதிலிருந்து மீண்டு விடவும்; மறை நமக்கு மறக்காமல்தான் போதித்தும் வைத்திருக்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டின், குறிப்பாக தென்மாவட்டங்களில் மரணிப்போரின் எண்ணிக்கையில் இந்த புற்று நோயே முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்திருக்கும் ஒரு செய்தியே.

புற்று நோய்க்கென்று இதுநாள்வரை கூறப்பட்டிருந்த காரணங்களை எல்லாம் மீறிய வேறு சில காரணிகளும் இந்த நோயின் பெருக்கத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடுமோ என்கிற ஐயப்பாடு, மரணிப்போரில் பெரும்பான்மையோர் பெண்களாகவும் இளவயதினர்களாகவும் இருப்பதைக் கொண்டு நமக்கு உறுதி படுகிறது.

இப்படியான இந்த கொடுமை நோயை வேரறுக்க; குறைந்தது முடிந்த மட்டும் கட்டுப்படுத்த அவசர கால நடவடிக்கைகளாக சிலவற்றை நாம் செய்தாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எழுந்திருக்கும் இந்த கொள்ளை நோயின் குரூரமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, சாத்தியமான சில வழிமுறைகளை கையாள வேண்டி, அதற்கெனவே அமைப்புக்கள் பல இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு பேரமைப்பின் கீழ், சில செயல்பாடுகள் வெகுவிரைவில் நடத்தப்பட திட்டமிடபட்டிருக்கிறது.

முதலில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நம் மக்களுக்கு ஏற்படுத்தவும் அதை தொடர்ந்து அதற்கான கலந்தாய்வு மற்றும் சில சிகிட்சை வழிமுறைகளை தொடரவுமான நடவடிக்கைகளால் முறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளின் விபரங்களை தெரியப்படுத்தப்படுத்திக் கொள்வதின் மூலம், அமைப்பின் எண்ணங்கள் செயல்பாட்டிற்கு வருவதை அமைப்பினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

1. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடன் (போட்டி என்றில்லாமல்) கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தூரம் கொண்ட முக்கிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாரதான் (Marathon) ஓட்டம் நடைபெறும்.

2. மாரதான் ஓட்டம் முடிந்த மறுநாள், புற்று நோய் பற்றிய எல்லா விபரங்களும் விளக்கமும் அதற்கு தேர்ச்சி பெற்றவர்களால் ஒரு கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறும். நோயை தடுக்கும் உபாயங்கள், விலக்கப்பட வேண்டிய உணவுகள், சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள் இன்னமும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் மருந்துகளும் மற்றெல்லா வழிமுறைகளும் இங்கே தெளிவாக்கப்படும். கலந்து கொள்வோரின் கேள்விகளையும் உள்ளடக்கியதாக நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி, தொடர்ச்சியாக நோய் கண்டறியும் சோதனைகளையும் கொண்டு முடிவுறும். இதற்கான தேதியும் இடமும் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.

3. 2016 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில்
நடத்தலாம் என்று தற்போது முடிவு
செய்யப்பட்டிருக்கிறது. உரிய தேதி விரைவில்
தெரிவிக்கப்படும்.

4. இந்த சமூக நல சேவையை கூட்டாக செய்து முடிக்க
மொத்தம் நான்கு சமூகநல அமைப்புக்கள் இதில் பங்கு
பெறுகின்றன. முறையே அவை…
உகாசேவா, மெகா சேரிட்டி, கே.எஃப்.சி. & கே.இ.எஃப் -ஜி.

5. முழுக்க முழுக்க சமுதாதாய மக்களின் துயர் துடைக்கவும் இந்த வன்மை நோயிலிருந்து நம் ஜனங்களை முடிந்த வரை காப்பாற்றி விடும் நோக்கத்திலும், அதற்குரிய விழிப்புணர்வையும் தடுப்பு ஆலோசனைகளையும் பரிசோதனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய இந்த அரிய வாய்ப்பை, கோட்டாறிலும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தவறவிட்டு விடாமல் கலந்து பயனடையுமாறு அமைப்பினரால் அக்கறையோடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் எனக்கு தரப்பட்டிருக்கிற ஒரு பொறுப்பின் அடிப்படையில்; என்னிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிற சில தகவல்களை, அறிய வேண்டியவர்கள் உரிய நேரத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இவ்விபரங்களையெல்லாம் நான் இங்கே விரிவாக விவரித்திருக்கிறேன்.
நோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் !

10813_488830407926340_2010597110637474255_nவாவர் ரஹீமுல்லாஹ், கம்பாலா, உகாண்டா

Raheemullah Mohamed Vavar

Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 24, 2015 in 1

 

~ எல் நினோ ~

12033073_1720060741551049_1687882217766908947_nகடலில் நீரின் வெப்பத்தின் அளவு கூடவொ குறையவோ செய்யும் போது பூமியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் திடீர் தட்பவெட்ப மாறுதல் ‘எல் நினோ’ என்று அழைக்கப் படுகிறது.

இந்த நிலைக்கு பூமிப் பந்து தள்ளப் படும்போது அதிக வெப்பம் திடீர் மழை காற்றின் வழக்கமான திசையில் இருந்து மாறி வீசுதல் போன்ற இயற்கையின் சீற்றம் வெள்ளப் பெருக்கு அதனால் பயிர்கள் சேதம் மற்றும் நோய்நொடிகள் போன்ற அழிவுகளையே அதிகம் தரும்.

2015 ல் ஆரம்பித்து விட்ட ‘எல் நினோ’ விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்குமென கணிக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் கடல் நீரின் வெப்பம் கூடியிருப்பது அரை டிகிரி மட்டுமே. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 22, 2015 in 1

 

மதம் கடந்த மனித நேய பணியில் இந்தியன் சோஷியல் ஃபோரம்!

சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார்(வயது35)என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைக்கு சென்றவர் தலை சுற்றி அருகில் உள்ள பிக்கப் மீது மோதி இறந்தார்.
இரண்டு மாதங்களாகியும் அவரது சடலம் ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்த தகவல் அறிந்து அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பிரிவை சேர்ந்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது உடனடியாக களமிறங்கினர்.

இறந்தவரின் ஸ்பான்சர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அல்சாஹர் அவர்களுடன் இணைந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து இறந்த சகோதரர் செல்வகுமார் சடலத்தை அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அல்ஹஸ்ஸாவிலிருந்து சடலம் தம்மாம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தம்மாமிலிருந்து இன்று இரவு 9மணிக்கு லங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாளை(திங்கட்கிழமை) காலை 8.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்ற தகவலையும் இறந்தவரின் ஊரை சேர்ந்த முத்துசாமி சுந்தர் என்பவர் மூலம் செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு சொல்லப்பட்டு விட்டது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 21, 2015 in 1

 

ஒவ்வாமை என்கிற அலர்ஜி

சி.எஸ். தேவநாதன்

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன? பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.

சிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.

பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.

அலர்ஜி என்பது என்ன? Read the rest of this entry »

 

எல்லாமே வாசலில் ! கதவுகளில்லா வாசல் !

மவுனத்தை யாசித்தேன்
நாக்கு முளைத்தது
நிசப்தத்தை தரிசித்தேன்
காது கிடைத்தது
இருளில் மூழ்கினேன்
விழிகள் வந்தது
விரும்பாதவைகளே
விதியாகிப் போனதால்
சந்தோசத்திற்காய் ஏங்கினேன்
சங்கடமே வந்தது

Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on September 14, 2015 in 1