RSS

.மனதுக்கு கடிவாளமிடு !… -J Banu Haroon

03 Sep

காற்றடித்து ,மழை பெய்தால் கசிந்துருகி நீ கண்ணீர் வடிக்கையில் அந்த இறைவனே கரைந்துருகிப் போவான் ..கலங்காதே !…

மரித்தவர் உயிர் மறுபடியும் அவனிடமே…. என்னின் ஆறுதல் உனக்கு எத்தனை நாளைக்கோ …மனம் தளராதே !…

மண்ணுக்குள் மட்கிப்போகும் மண்ணை நினைத்து மனசுக்குள் மறுகாதே !… நாமும் மண்ணவர்கள் தான் !…

நாளை ஒருநாள் நாமும் வாழ்க்கை சரித்திரம் இழந்து போவோம் எண்ணிக்கொள் !..நம் உயிரும் மறுபடியும் அவனிடமே மீண்டுவிடும் !…

உடலுக்கு முக்கியத்துவம் உலகில் மட்டுமே ,அங்கில்லை !..அறியமாட்டாயோ நீ?…

காலமும் கடந்தது கவலையை விடு ,சகோதரி !..கல்பை இறுக்கிக் கொள் !..மனதுக்கு கடிவாளமிடு !…

மகான்கள் யாரும்கூட ஆயிரம் வருடம் வாழ்ந்ததில்லை !…மன்னருக்குக்கூட மண்ணறை படுக்கைதான் !…

அறிந்தவற்றையெல்லாம் நீ அறியாததுபோல் தவிக்கலாமோ !..அன்னம் தண்ணி மறந்து இறைவனையே நீ சபிக்கலாமோ ?…

உங்கள் மக்கட்செல்வத்திலும் ,மற்ற செல்வத்திலும் உங்களுக்கு சோதனையுண்டு என்று இறைவன் ‘குர் ஆனில் ‘சொன்னதை …இன்னுமா விளங்க மறுக்கிறாய் !……….

இது சோதனைக் காலமல்ல !…பரிசோதனைக் களம் !….விளங்கிக்கொள் !…..உலகமாயை உனக்கானது மட்டுமல்ல …எல்லோருக்குமானது !…உதறிச்செல் ……

10406769_331120727042074_4328465882605504469_nJ Banu Haroon
 
Leave a comment

Posted by on September 3, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: