RSS

நேரில்கண்டு நெகிழ்ந்து வியந்து மனம் மகிழ்ந்து போன சம்பவம் – Gajini Ayub

08 Sep

11014847_693215367490112_4936168660591025995_nநேற்றொரு நிகழ்வில் நான் நேரில்கண்டு நெகிழ்ந்து வியந்து மனம் மகிழ்ந்து போன சம்பவம் ஒன்றை மறைவின்றி கூற என்மனம்விரும்பவே இந்த பதிவில் பதியமிடுகிறேன் !

நேற்று ஹேப்பிஇல்லத் திருமண நிகழ்வில் கலந்து உரையாற்றி சிறப்பித்துவிட்டு ஓயவிற்க்கென மயிலாடுதுறை பாம்ஸ் ஹோட்டலில்தங்கியிருந்தபோது திரைக்கலைவித்தகர் டி.ராஜேந்தரைநானும்நண்பர் நீடூர்அஷ்ரப்அலியும் சந்திக்க சென்றபோது.

அங்கே நாங்கள் செல்வதற்குமுன்பே டி,ஆருடன் அவருடைய .இளமைக்காலநண்பர் வடகரை .ஹாரூன் மற்றும் ரிஜ்வானுல்லாவும் டி ஆருடன் பேசிகொண்டிருந்தார்கள்,

11149498_692192277592421_4483205345958115645_nநானும் நண்பர் நீடூர் அஷ்ரப் அலியும் அவர் தங்கியிருந்த அறையின்உள்ளே நுழைய எங்களை பெயர்சொல்லிஅழைத்து எழுந்துவந்து கைகுலுக்கி உட்காரவைத்து
நலம் விசாரித்த பின் மீண்டும் அளவளாவல் தொடர்கையில்

10557621_1504964983069515_648425502875756435_oஅருகில் இருந்த நண்பர் ஹாரூன் தனக்கு மகன்வழி பேத்தி பிறந்திருப்பதை சாதரணமாக தெரிவிக்க அதைக்கேட்ட டி.ஆர் . என் நண்பன் தாத்தாவாகிட்டீர்கள் வாங்க உடனே உங்க இல்லம்போய் உங்க பேத்தியை வடரைசென்று பார்த்துவிட்டுவருவோம்னு கூறிவிட்டு என்னையும் அஷ்ரப்அலியையும் கூடவேவாங்க நாம வந்துபேசுவோம் என்றுஎழுந்ததோடு எங்களுக்கும் அன்புகட்டளை பிறப்பித்து வாங்கன்னுகாரில் ஏற்றிக்கொண்டு வழியில்குழந்தைக்கு கிப்ட் வாங்கி எடுத்துக்கொண்டு காலையில் திருமணத்திற்கு வந்த டி.ஆர்.கார்மீண்டும் ஊரறியாமல்ரகசியமாய் வடகரை ஹாரூன்இல்லத்தில் நுழைந்தது

உறங்கிகொண்டிருந்த தம்பேத்தியை ஹாரூன்அவர்கள் சிறுவெண்ணிறமொபைல் தொட்டியில்தூக்கிவந்துதர, டிஆர் குழந்தையைமடியில்ஏந்தி முகம் மலர நோக்கி;; எத்தனைமுறை சொல்வேன் உனக்கென இன்ஷா அல்லாஹ்…’ என்றுகுரலெடுத்துப் பாட குழந்தையோ கண்விழித்து புன்னகைக்க ஆஹா ..நான் பாக்கியசாலி …உங்க பேத்தியின் கள்ளமில்லாபுன்னகையில் என் உள்ளமெல்லாம் கவலையைதூக்கிபோட்டுடுச்சிமாத்தி ன்னு உணர்வுபொங்க சிலாகித்து அப்துல்கலாம்போல நானும் குழந்தைகளின் ரசிகன் என்று கூறிவிட்டு எல்ஹம் ஜயனா என்றபேத்தியின் பெயரை ஹாரூன் விளக்கிகூற அதை டி ஆரும் எல்ஹம் ஜயானா நீ பேசாபுன்னகை மொழியில்எனக்கு தந்தது ‘ வெல்கம் ஐயா ன்னா ? என்று கேட்டுவைக்க அப்போது குழந்தைமறுபடியும் சிரிக்க மழலைசிரிச்சுருச்சி எனக்கு போயிடுச்சி சனிபெயர்ச்சி ன்னு தானும் ஒரு குழந்தையாகி குதூகலித்து சிரித்து மகிழ்ந்த டி ஆரை கண்டு அருகில்நின்ற நாங்களும் வியந்துநோக்க

உங்க தாத்தாஇல்லேன்னா ஏதும்மா இந்த டி ஆர் என்றுகூறி குழந்தையிடமும் ஹாரூன் இல்லத்திலிருந்தும் கையசைத்து விடைபெற்ற டி ஆருடன் நாங்களும் தேநீர் சிற்றுண்டி அருந்தி விட்டு விடைபெற

காரில் ஏறியபின் நாங்கள் மீண்டும் மயிலாடுதுறைபாம்ஸ்ஹோட்டல்நோக்கி விரைய பயணித்த என் மனமோ ஹாரூன்அவர்களின்மீது டி ஆர் வைத்திருக்கும் நேசமறவா நன்றியுணர்வில் ஒன்றிபோயிருந்தது !!!

( இன்னும் வரும் …….! )

11918930_690235401121442_2944323913213405358_nGajini Ayub

Advertisements
 
Leave a comment

Posted by on September 8, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: