RSS

இரவும் பகலும் கம்யூட்டர்தான்! உலகமே அன்னியமாகி போச்சு!

13 Sep

// 1999 ஆண்டு பார்க்கத்தான்
கம்யூட்டரில் ‘யுனிகோடு – தமிழ் பாண்ட் சிஸ்டம்’
அறிமுகம் ஆனது!
அதற்கு முன் – 1990 வாகிலிருந்து
கம்யூட்டரில்
தமிழ் உபயோகத்திற்கு ஏகப்பட்ட தமிழ்ப் பாண்டுகள்!

சிங்கப்பூர் தமிழன்,
மலேசியா தமிழன்,
உலக நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த
தமிழர்கள் பலரும்
கம்யூட்டர் சாப்வேர் கற்று
பல தினுசில் தமிழ்ப் பாண்டுகளை ஆக்கி
திணறடித்துவிட்டனர்!
தமிழுக்கு அன்றைக்கு அத்தனை தமிழ்ப் பாண்டுகள்!

அந்தக் காலக்கட்டத்தில்
இந்திய மொழிகள் எதுவும்
கம்யூட்டரில் அரங்கேறவில்லை!
பெரியார்
தமிழ் எழுத்துக்களை குறைத்து
சீவி கூர்மையாக ஆக்கி தந்துதவியபடியால்…
கம்யூட்டரோடு தமிழ்
சட்டெனெ ஒட்டிவுறவாட தொடங்கிவிட்டது!

இந்திய மொழிகள் அத்தனையுமே
அன்றைக்கு
தமிழை வியப்பு கலந்த பொறாமையில் பார்த்தது!
அந்தக் காலக்கட்டத்தில்
ஆங்கிலம் , பிரான்ஸ் க்கு அடுத்தப்படியாக
கம்யூட்டரில் ஜெய வலம்வந்த
மொழியென்றால் அது தமிழ்தான்!

யுனிகோர்ட் தமிழ்ப் பாண்டை
2003 -ல் துபாயில்வைத்து
ஆபிதீன் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
2005-ல் நான் சொந்தமாக வாங்கிய
புது கம்யூட்டருக்கு
அவர்தான் யுனிகோடு பதித்தும் கொடுத்தார்.

அந்நேரம் பார்க்க
“வாங்கிய புதிய கம்யூட்டர் எப்படியா…?
நன்றாக இருக்கா?” என்று
ஆர்வ மேலீட்டில் அவரிடம் கேட்கவும்…
“எல்லாம் அமர்க்களம்தான்!
நீங்க இதனை உபயோகிக்க போற நினைச்சாதான்
இந்த கம்யூட்டர் மேலேயே
பரிதாபப்பட வேண்டி வருது…” என்றார்.

புதிய கம்யூட்டர் சகிதமாக ஊர் வந்த நேரம்
என் எழுத்துப் பணிகள் முழுவீச்சாக கிளர்ந்தது.
இரவும் பகலும் கம்யூட்டர்தான்!
உலகமே அன்னியமாகி போச்சு!

அந்த காலக்கட்டத்தில்
12002180_913263412076736_3984092932225460424_nஎன் மகன் அஜ்மல்தீன்
பி.டெக். கம்யூட்டர் ஹார்ட்வேர் படித்து கொண்டிருந்தார்.
கம்யூட்டரில் எனக்கு என்னென்ன ஆப்ஸ்னல் தேவையோ
அவைகளை கேட்ட நாழிக்கு செய்தும் தந்தார்.

இன்றைக்கு..மகன், அஜ்மல்தீனுக்கு
பிறந்த நாள்: 12 – 09 – 2015
ஃபேஸ்புக்கில் உட்கார்ந்து உங்களோடு
மொழிவழியே உரையாடுகிறேன் என்றால்…
அதற்கும் பையனே முதல் காரணம்!

சென்னை மஹேந்திரா & மஹேந்திராவை விட்டுவிட்டு
இப்போது
குவைத்தில் போய் இருக்கிறார்.

# 12 – 09 – 2015
என் மகன் அஜ்மலுக்கு பிறந்த நாள்.
என் சிந்தையெல்லாம் அவனுக்கான
வாழ்த்தாகவே இருக்கிறது.
கிட்டக்க இருந்தால் உச்சு முகரலாம்…
என்ன செய்ய?

என் வாழ்த்துக்களோடு
உங்களது வாழ்த்தும் சேரட்டும்.
நன்றி…

தாஜ்...

*10494782_688808787855534_3669785479586600242_n

என் வாழ்த்துக்களோடு
உங்களது வாழ்த்தும் சேரட்டும்.
நன்றி…

– தாஜ்…

*
1:18 PM 9/12/2015

 
Leave a comment

Posted by on September 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: