RSS

Vintage Van Delivers Vintage………../-Rafeeq Friend

13 Sep

12019960_10153587694446575_4781528852374858207_nVintage Van Delivers Vintage………..

வார்த்தையை நான் முடிப்பதற்குள், “ சரக்கை போட்டுகிட்டு வண்டில சுற்றினார்கள். இப்போ ‘சரக்கை’ வண்டில போட்டு சுற்ற ஆரம்பிச்சிட்டாங்களா? என்று ஒரு குரல் பக்கத்து சீட்டிலிருந்து கேட்டது.

அடேய், ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து மூளையை மயங்கச் செய்யும். ஆனால் ஆங்கில வார்த்தைகளையே கூட உங்களை மறக்கச் செய்துவிட்டதே என்ற போது,

VINTAGE என்றாலே அது ஒரு வகை மதுவின் பெயர்தான். அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று அடுத்த சிலர் வக்காலத்து…

சரி, இது மது பற்றிய பதிவு அல்ல….

Vintage Van Delivers Vintage Literature என்ற தலைப்பில் ஒரு TWEET வந்திருந்தது.அதன் கட்டுரையினைப் படித்தேன்.

போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பென் நகரில் ஒரு புத்தகப் பிரியர், 36 வயதே ஆன ஃபிரான்ஸிஸ்கோ ஆண்டோலின் என்பவருக்கு புத்தகங்கள் மீது அதிலும் போர்ச்சுகீசிய பழம்பெரும் இலக்கியங்களின் மீது தீராத காதல். எங்கு யாரைப் பார்த்தாலும் புத்தங்களைப் பற்றியும் இலக்கியங்களைப் பற்றியும் பேசுவதே அவர் வழக்கமாய் இருந்திருக்கிறது.

தமது நாட்டின் இலக்கியங்களை, சரித்திரங்களை வெளிநாட்டினரும் தெரிந்து கொள்ளவேண்டும். முறையான சரித்திரங்களே நமது கலாச்சாரங்களை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லும் தூதுவன் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

வெளிநாட்டினர் படிக்க வேண்டுமெனில் தமது மொழியிலுள்ள இலக்கிய நூல்களை மற்ற மொழிபெயர்க்க வேண்டுமே என்ற சிந்தனையில் மூழ்கிய போது, உடனே அவரது நண்பர்கள் டோமிங்கோஸ் க்ரூஸ் மற்றும் ஜொஆ கொர்ரிய பெரீரா என்ற இருவரும் நினைவுக்கு வந்திருக்கிறார்கள்.

இதுபற்றி விவாதித்த நண்பர்கள் குழு, இறுதியில் நமது இலக்கி்யங்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது மிகக் குறைவு எனவும் போர்ச்சுகீசிய மொழியறியாதோர் தமது இலக்கியங்களையோ கலாச்சாரங்களையோ அறிவது மிகக் கடினம் எனவும், எனவே உடனடியாக ஒரு புத்தக நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இதனிடையே சீனா சென்று வந்த க்ரூஸ், அங்கு பள்ளிக்கூட குழந்தைகளுக்கான நடமாடும் புத்தகம் / எழுதுபொருள் கடையினைப் பார்த்தது பற்றி வியந்து சொல்ல, பாரம்பரிய முறையில் கடை வைப்பதாக இருந்த அவர்களது முடிவை மாற்றிக் கொண்டு, தங்களது மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை விற்பதற்கு நடமாடும் கடை அமைக்க நண்பர்கள் மூவரும் திட்டமிட்டனர்.

பழங்கால வண்டியில் பழங்கால இலக்கியங்களை விற்பது என்று புதிய சிந்தனை வர, 1975ம் ஆண்டின் ரெனால்ட் Estafette மாடல் வேன் ஒன்றை வாங்கி அழகாக மறுசீரமைத்து உதயமானது “ Tell a Story” என்று பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட நடமாடும் புத்தக நிலையம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த புத்தக நிலையத்தில் இப்போது ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தாங்கிக் கொண்டு நகர் முழுவதும் வலம் வந்து கொண்டே இருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாக கவர்ந்துள்ள எங்களின் இந்த சிறு முயற்சி. விரைவில் ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் இந்த நண்பர்கள்.

நாம் சாலைகளில் நடமாடும் புத்தக நிலையங்களை உருவாக்கக் கூட வேண்டாம்; தள்ளாடும் மனிதர்களை உருவாக்காமல் இருந்தாலே நமது முன்னோர் காத்த கலாச்சாரம் காப்பாற்றப்படும் என்பது திண்ணம்.

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend

*இது 2014 ஆண்டு எழுதிய பதிவு…..

Advertisements
 
Leave a comment

Posted by on September 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: