RSS

நோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் !

24 Sep

நாள்: 24 செப்டம்பர் 2015
உகாண்டா, கம்பாலா

ஒரு முக்கிய அறிவிப்பு !

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
அருளாளனவன் அருள் செய்திருக்கும் நம்முடைய இந்த உலக வாழ்வில், வாழும் வாழ்க்கையை நோயின்றி வாழும் வழிவகைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமே. எத்தனை எத்தனையோ நோய்கள் இங்கிருந்தாலும், உடலில் வேர் விதைத்து உயிரையே அறுவடை செய்யும் இந்த புற்று நோயே இன்றைக்கு உயிர் பலியில் உயர் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது புள்ளி விபரம் தரும் கணக்கு.

நோய் இல்லாதவன் அல்லாஹ் அவன் ஒருவனே எனினும்; வந்த நோய்க்கு அதற்கான மருந்து உட்கொண்டு அதிலிருந்து மீண்டு விடவும்; மறை நமக்கு மறக்காமல்தான் போதித்தும் வைத்திருக்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டின், குறிப்பாக தென்மாவட்டங்களில் மரணிப்போரின் எண்ணிக்கையில் இந்த புற்று நோயே முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்திருக்கும் ஒரு செய்தியே.

புற்று நோய்க்கென்று இதுநாள்வரை கூறப்பட்டிருந்த காரணங்களை எல்லாம் மீறிய வேறு சில காரணிகளும் இந்த நோயின் பெருக்கத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடுமோ என்கிற ஐயப்பாடு, மரணிப்போரில் பெரும்பான்மையோர் பெண்களாகவும் இளவயதினர்களாகவும் இருப்பதைக் கொண்டு நமக்கு உறுதி படுகிறது.

இப்படியான இந்த கொடுமை நோயை வேரறுக்க; குறைந்தது முடிந்த மட்டும் கட்டுப்படுத்த அவசர கால நடவடிக்கைகளாக சிலவற்றை நாம் செய்தாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எழுந்திருக்கும் இந்த கொள்ளை நோயின் குரூரமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, சாத்தியமான சில வழிமுறைகளை கையாள வேண்டி, அதற்கெனவே அமைப்புக்கள் பல இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு பேரமைப்பின் கீழ், சில செயல்பாடுகள் வெகுவிரைவில் நடத்தப்பட திட்டமிடபட்டிருக்கிறது.

முதலில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நம் மக்களுக்கு ஏற்படுத்தவும் அதை தொடர்ந்து அதற்கான கலந்தாய்வு மற்றும் சில சிகிட்சை வழிமுறைகளை தொடரவுமான நடவடிக்கைகளால் முறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளின் விபரங்களை தெரியப்படுத்தப்படுத்திக் கொள்வதின் மூலம், அமைப்பின் எண்ணங்கள் செயல்பாட்டிற்கு வருவதை அமைப்பினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

1. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடன் (போட்டி என்றில்லாமல்) கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தூரம் கொண்ட முக்கிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாரதான் (Marathon) ஓட்டம் நடைபெறும்.

2. மாரதான் ஓட்டம் முடிந்த மறுநாள், புற்று நோய் பற்றிய எல்லா விபரங்களும் விளக்கமும் அதற்கு தேர்ச்சி பெற்றவர்களால் ஒரு கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறும். நோயை தடுக்கும் உபாயங்கள், விலக்கப்பட வேண்டிய உணவுகள், சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள் இன்னமும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் மருந்துகளும் மற்றெல்லா வழிமுறைகளும் இங்கே தெளிவாக்கப்படும். கலந்து கொள்வோரின் கேள்விகளையும் உள்ளடக்கியதாக நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி, தொடர்ச்சியாக நோய் கண்டறியும் சோதனைகளையும் கொண்டு முடிவுறும். இதற்கான தேதியும் இடமும் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.

3. 2016 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில்
நடத்தலாம் என்று தற்போது முடிவு
செய்யப்பட்டிருக்கிறது. உரிய தேதி விரைவில்
தெரிவிக்கப்படும்.

4. இந்த சமூக நல சேவையை கூட்டாக செய்து முடிக்க
மொத்தம் நான்கு சமூகநல அமைப்புக்கள் இதில் பங்கு
பெறுகின்றன. முறையே அவை…
உகாசேவா, மெகா சேரிட்டி, கே.எஃப்.சி. & கே.இ.எஃப் -ஜி.

5. முழுக்க முழுக்க சமுதாதாய மக்களின் துயர் துடைக்கவும் இந்த வன்மை நோயிலிருந்து நம் ஜனங்களை முடிந்த வரை காப்பாற்றி விடும் நோக்கத்திலும், அதற்குரிய விழிப்புணர்வையும் தடுப்பு ஆலோசனைகளையும் பரிசோதனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய இந்த அரிய வாய்ப்பை, கோட்டாறிலும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தவறவிட்டு விடாமல் கலந்து பயனடையுமாறு அமைப்பினரால் அக்கறையோடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் எனக்கு தரப்பட்டிருக்கிற ஒரு பொறுப்பின் அடிப்படையில்; என்னிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிற சில தகவல்களை, அறிய வேண்டியவர்கள் உரிய நேரத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இவ்விபரங்களையெல்லாம் நான் இங்கே விரிவாக விவரித்திருக்கிறேன்.
நோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் !

10813_488830407926340_2010597110637474255_nவாவர் ரஹீமுல்லாஹ், கம்பாலா, உகாண்டா

Raheemullah Mohamed Vavar

Advertisements
 
Leave a comment

Posted by on September 24, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: