RSS

எது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும்

25 Sep

சண்டைகள், சத்தங்கள், ஆரவாரங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்ற அனுமானங்களின் மீது எமக்கு நம்பிக்கை குறைவு. மாறுபட்ட பார்வைகளைக் கொண்டவர்கள், பிரபலங்களோ அல்லது சாதாரணர்களோ, ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சமூகப் பிரக்ஞையுடன் தர்க்கங்களை முன்வைப்பதை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள்.

மக்கள் எளிதில் மறப்பதை நினைவூட்டவும், சொல்லப்படாத புள்ளிகளைத் தொட்டுச் செல்லவும், மறைபொருளாகப் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களில் வெளிச்சம் பாய்ச்சவும், இரு தரப்பு தர்க்கங்களுக்கு அப்பால், எது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும் எனக் கருதி வந்திருக்கிறோம். கூடுமானவரை அவ்வாறே நடக்கவும் முயன்றிருக்கிறோம்.


அவ்வகையிலான பாதைக்கு தமிழ் மக்கள் நல்லாதரவைத் தெரிவிப்பார்கள் என்பதற்கு, கடந்த வார ஆறு நாட்களின் புள்ளிகள் கட்டியம் கூறுகின்றன. இறைச்சிக்குத் தடை, மதிமுக சலசலப்பு, சகாயத்தின் சத்யாகிரகம் மற்றும் ஐநா-வில் இலங்கை விவகாரம் என கடந்த வார விவாதங்களுக்கு மக்கள் தந்த அங்கீகாரம், எமது நம்பிக்கையை மேலும் வலுவாக்கி இருக்கிறது.
நன்றி, தமிழ்கூறும் நல்லுலகே!

10616607_10204495222611571_3383832642033559746_nGunaa Gunasekaran

12032143_10207656435999930_6312385699333972842_n

Advertisements
 
Leave a comment

Posted by on September 25, 2015 in 1

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: