RSS

Monthly Archives: October 2015

விடியலை நோக்கி தேசம் ..

உலகெங்கும்
கலை
கலாச்சார
பிரச்சாரங்களின் மூலமாகவே
புரட்சிகளும்
மாற்றங்களும் ஏற்பட்டன.
அடங்காத ஆட்சியாளர்களின்
ஆட்டத்தை அடக்கும் திறன் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on October 31, 2015 in 1

 

இருப்பு – நிஷா மன்சூர்

1383528_348318975312026_716240424_n
உங்கள் அளவுகோல்கள்
பலஹீனமானவை

நீரை அளக்க தராசுடனும்
நிலத்தை அளக்க குடுவைகளுடனும்
வருகிறீர்கள்

அலைகடலின் ஆழத்தை
பூக்களின் வாசத்தை
மனங்களின் சூட்சுமத்தை
வர்ணங்களின் பரவசத்தை
துரோகங்களின் வலியை
மொழியின் ஆளுமையை
அன்பு நிகழ்த்தும் மாற்றங்களை Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 28, 2015 in 1

 

கொடுப்பினை வேண்டும் குழந்தை பாக்கியத்திற்கு !!!

1395151_10200881479701616_1641510505_nஒருமனிதனுக்கு பாக்கியத்திலும் பெரும்பாக்கியம் என்று சொன்னால் அது குழந்தைபாக்கியமாகத்தான் இருக்கமுடியும். குழந்தைபாக்கியம் பெற்றிருந்தால்தான் இவ்வுலக மக்கள் ஒரு ஆணையும்,பெண்ணையும் முழுமையான அடையாளமாக பார்க்கிறார்கள். எத்தனை கோடி செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் பலவசதிகளைப் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதோர் வாழ்வில் மனதார மகிழ்ச்சியோ சந்தோசமோ இருக்க வாய்ப்பில்லை.

வீட்டில் ஒலிக்கும் மழலையின் அழுகைச் சப்தமும் விளையாட்டுச் சப்தமும்தான் அந்த வீட்டார்க்கு மனதில் எத்தனைகவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து ரசிக்க வைக்கும். மழலையரின் மழலைமொழி இனியராகமாய் மனதிற்கு மகிழ்வையும் இதயத்திற்கு இனிமையும் தரும். அதில் கிடைக்கும் ஆனந்தமும்.மகிழ்வும் ஒரு தம்பதியருக்கு வேறு எதிலும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் எந்த பொருளோடவும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத ஒப்பில்லா மனித வாரிசாகும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 25, 2015 in 1

 

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

மனைவியை மகிழ்விப்பது எப்படி?
feather_iconதமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)

அழகிய முகமன்

வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 22, 2015 in 1

 

சாருஹாசன் பேசறேன்…

11148434_1157834167577491_3737295904758642495_nசாருஹாசன் பேசறேன்…
—————————————-
நான் நடிகர் சங்கத்தின் ஆயுள் சந்தாதார். ஆனால் சங்க தேர்தலில் ஓட்டு போட செல்லவில்லை. யார் அழைக்கிறார்கள்?

அவர்கள் என்னை ஒரு நடிகனாக எற்று கொண்டதில்லை. நானும் சினிமாவை இந்தியனின் பெருமையை வளர்க்கும் ஒரு சமூக நல தொண்டு நிறுவனமாக கருதுவதில்லை.

வக்கீல் தொழில் செய்யும்போது ஒரளவு ஆங்கிலம் பேசியது தொழில் வளர்ச்சிக்காக. அதை தவிர எனக்கு தமிழ் ஒன்றுதான் பேசத் தெரியும். ஆனாலும் தமிழ் சினிமாவில் நடிக்க நான் அழைக்கபட்டதே இல்லை. மலையாள கன்னட சினிமாக்களில் நடிக்கதான் அழைப்பார்கள். Read the rest of this entry »

 
1 Comment

Posted by on October 19, 2015 in 1

 

வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

tamilmuslimmarriagefeast-660x330– முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா) –

வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்’ (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 19, 2015 in 1

 

அழிரப்பர்

தடைகளைத் தகர்த்திட
கோடாரி எதற்கு?
உறுதிகொண்ட நெஞ்சு
ஒன்றே போதுமே!

நடப்பது நடந்தே தீரும்.
நீங்கள் ஒளித்து வைத்திருப்பது
வெறும் சீப்புதான்

பருப்பில்லாமலும்
திருமணம் நடக்கும்.
அட்சதை போட
அரிசிகள் போதுமே! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 5, 2015 in 1