RSS

Monthly Archives: November 2015

உயர்ந்த மனிதர்கள்

உயர்ந்த மனிதர்கள்

உயர…உயர…

இன்னும்

உயர…உயர…

மேலும்

உயர…உயர…
பறந்த பறவைகள்
பறக்கும் ஆசையை
குறைத்துக் கொண்டன.
காரணம்
சிறகுகள்
பழுதாகி விட்டதால் அல்ல;
சிறகுகள்
சுமையாகி விட்டதால்.

பிறப்பும் சுமை
இளமையும் சுமை.
அது தரும்
பொறுப்பும் சுமை
குடும்பமும் சுமை. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on November 26, 2015 in 1

 

நல்லவரா கெட்டவரா

12308337_1177686608925580_2454431018344291530_nநல்லவரா கெட்டவரா
—————————————
என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர்கள்கூட ஆமிர் கான் இப்படி பேசியிருக்க கூடாது என்று எழுதினார்கள்.
வருத்தமாக இருந்தது. அரை குறையாக எதையாவது கேள்விப்பட்டு ஆத்திரம் கொள்வதே நமக்கு வாடிக்கையாகி விட்டது. எப்பொருள் யார் யார் என்ற குறளை யார் மறந்தாலும் ஒரு ஊடகன் மறக்கலாமா?

அதுதான் இதை எழுத தூண்டியது.

ஆமிர் கான் ஒரு வில்லன் என்ற முடிவுக்கு வந்து விட்டவர்கள் வாசிக்க வேண்டாம். என்னதான் நடந்தது, ஆமிர் என்ன சொன்னார், ஏன் சொன்னார் என்று கான்டெக்ஸ்ட் தெரிந்து கொள்ள விரும்புவோர் மட்டும் வாசியுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

எச்சரிக்கை: நீளமான பதிவு. நேரம் குடிக்கும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தவர் ராம்நாத் கோயங்கா. ஆர்என்ஜி என்பார்கள். அவர் பெயரால் எக்ஸ்பிரஸ் நிறுவனம் விருது ஏற்படுத்தி உள்ளது. சிறந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆமிர் கான் சிறப்பு விருந்தினர். ஆர்என்ஜியின் பேரன் அனந்த் கோயங்கா அவரை பேட்டி கண்டார். பார்வையாளர்களும் கேள்விகளை வீசினர். அதிலிருந்து…

அனந்த்: வருகைக்கு நன்றி ஆமிர்.

ஆமிர்: பத்திரிகை துறைக்கு சவாலான காலகட்டம் இது. இந்தியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். எல்லாருக்கும் வணக்கம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 25, 2015 in 1

 

பொதுத்துறை நிறுவனங்களின் அவசியம் குறித்து அனுபவப்பூர்வமாக இயற்கை உணர்த்தியிருக்கிறது.

12246736_10208196132050581_3392739479764020769_nகடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி வந்த விஷயத்தை நேற்று சென்னையை முற்றிலும் முடக்கியதன் வழியாக பளிச்சென்று இயற்கை புரிய வைத்திக்கிறது. அதுதான் பொதுத்துறையின் அவசியம். குண்டும் குழியுமான சாலைகள். எங்கும் முட்டி அல்லது இடுப்பு வரை நீர். அப்படியிருந்தும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள் / பார்க்கிறார்கள். பயணிகளை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் / சேர்க்கிறார்கள். தீயணைப்பு படையில் பலர் தொடர்ந்து 48 மணிநேரங்களாக வீட்டுக்கு செல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்ய வெறும் ஹவாய் செருப்புடன் இருட்டிலும் டிரான்ஸ்ஃபார்மர் மீது எந்தவொரு பாதுகாப்பு கருவியும் இன்றி ஏறி மின் ஊழியர்கள் பழுது பார்க்கிறார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 24, 2015 in 1

 

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

(கீழை ஜஹாங்கீர் அரூஸி)

indexஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 18, 2015 in 1

 

மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்-

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன . மழையால்பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் ( தாசில்தார் ) தொலைபேசி எண்கள் :-

சென்னை

Fort-Tondiarpet 94450 00484
Purasawakkam-Perambur 94450 00485
Egmore-Nungambakkam94450 00486
Mylapore-Triplicane 94450 00487
Mambalam-Guindy 94450 00488 Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 17, 2015 in 1

 

செயல் ஒன்று, விளைவுகள் வேறு !

12247106_665374916938554_4933657620057863560_n

செயல் ஒன்று, விளைவுகள் வேறு !
ஞாயிறு விடுமுறையன்று அடித்துக் கொளுத்திய வெயில், இன்று திங்களில் நேற்றைய வெப்ராளம் முழுவதையும் காட்டியது போல், காலை 6-30-க்கு தொடங்கிய மா மழை பக்க வாத்தியங்களான இடி மின்னலுடன் 10-00 வரை கொட்டித் தீர்த்தது என்பது கம்பாலாவின் மழைக் காட்சி.

பூமத்திய ரேகையின் மேல் அமர்ந்திருப்பதால், முதல் மணிக்கூரில் கடுமையான வெயிலும் அடுத்த மணிக்கூரிலேயே மழை அடித்ததற்கான எந்த தடயங்களும் இல்லாமல் ஆகிவிடுவது, இந்த மண்ணுக்குண்டான எப்போதுமான பழக்கம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 17, 2015 in 1

 

அம்மாவுக்கு எல்லாம் தெரியும்…

12243284_1097135826965943_552570438996587634_nஅழ! அழ! இழுத்துப்பிடித்து
பாதங்களில் அமரவைத்து;
நெற்றியின் புருவத்தோடு
கையைத் தடுப்பாக்கி..
குழந்தையைக் கடுப்பாக்கி;

சுடுநீரில் பச்சைத் தண்ணீரைக்கலந்து
பச்சிளம்பிள்ளையின் உச்சந்தலையில்
ஊற்ற – ஊரே கேட்குபடி அவன்
மூச்சுமுட்ட அழ.. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 16, 2015 in 1