RSS

..பகல் கனவு ………………….

06 Nov

by தமிழ் பிரியன் நசீர்

12065918_627597527382288_4508152262173409174_n

வெண் முகிழ்…..
பஞ்செடுத்து….
வெளிச்ச மின்னல்
இடைச்சொருகி……
வின்னெடு வான் நிலத்தில்
விழைந்த நற்த் தாரகைப் பறித்து..

மண் வந்து சேரும் முன்னே
மழை நூலைத் தரியாக்கி
பொன்னெழில் வானவில்லின் வண்ணங்களையதில் நனைத்து

என்னழகு தேவதைக்கு
வண்ணமிகு ஆடை நெய்தேன்..!!

மாலைச் சந்திர மஞ்சள் பறித்தேன்
மார்கழித் திங்களைச்
சேர்த்துக் குழைத்தேன்
சாலை மலர் மகரந்தம் தெளித்து
அவள் சந்தன உடலில்
பூசித் திளைத்தேன்..!!

முழுமதியின் நிழலெடுத்தேன்
முச்சுடரைத் தூரிகையாக்கி
அக நிலவின் இமையோரம்
அஞ்சனம் தீட்டி வைத்தேன்..!!

இரு நிலவு ஒரு சேர
அவள் விழியில் மறுவடிவில்
திரையகன்ற ஒளி வீச்சில்
திக்குற்று நானெழுந்து
பகற் கனவோ இதுவென்று
படுக்கையைக் கடிந்துச் சென்றேன் ..!!

10013575_572342126241162_3385057115811552774_nதமிழ் பிரியன் நசீர்
 
Leave a comment

Posted by on November 6, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: