RSS

நான் / தாஜ்

07 Nov

12188898_937876089615468_3925020103447977190_n
உதயத்திற்கு விரைய
பேரொளி மறைகிறது!
இரவென்று தூங்க உச்சத்தில்
அது வீச்சாய் தீய்க்கிறது.
தாவி குன்றேறியும்
பாதாளமே பார்க்கிறேன்
இசை கேட்டு கிரங்கி
முகம்காண பரபரக்க
நாயொன்று துள்ளியோடுகிறது
இடி மின்னல் குறிப்புணர்த்தி
கன மழையில் வளையவர
உடல் தகிக்கிறது
மண்டைக்குள் தாளத்தின்
லயமற்ற அதிர்வு
பணிய ஸ்தலம் தேடிப் போக
ஸ்வாமியென வணங்குகிறார்கள்
பூஜியமாகும் விடை அறியாது
ஒண்ணும் ஒண்ணுமென
இன்னும் கூட்டுகிறார்கள்
ஆகி வீடென புகும் தோறும்
வாழும் சப்தம் வரவேற்கிறது
நிழழுக்கு ஒதுங்கும் மரங்கள்
இலை யுதிந்து காய்கிறது
நினைவை ஒருமுகப்படுத்த
ஞானவெளியில் பல வண்ணப்
பூக்கள் குழுங்குகிறது
காலம் தாழ முழு நிலவு
என் மீது
காதல் கொள்ளும் பெண்
என்னைப் போலவே தெரிகிறாள்
சகாக்களிடம் இதையும்
சொல்லி அழுதால்
நான்கு சுவர்களும் சிரிக்கிறது
அதுகளுக்கு என்ன தெரியும்?
சுதந்திர சுவாச வேட்கையில்
அதிகாரத்திடம்
மோதிக் கொண்டிருப்பவன் நான்!

என் மீது
காதல் கொள்ளும் பெண்
என்னைப் போலவே தெரிகிறாள்
சகாக்களிடம் இதனைச் சொல்லி அழுதால்
நான்கு சுவர்களும் சிரிக்கிறது!
அதுகளுக்கு என்ன தெரியும்?
சுதந்திர சுவாச வேட்கையில்
அதிகாரங்களுடன்
மோதிக் கொண்டிருப்பவன் நான்!

10494782_688808787855534_3669785479586600242_nTaj Deen
 
Leave a comment

Posted by on November 7, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: