RSS

தீயாய் எழுந்தானே, தீயோரை அழித்தானே !

11 Nov

தீயாய் எழுந்தானே, தீயோரை அழித்தானே !

12239580_663839467092099_8188446366876246712_nபீகாரின் தலைநகரான பாட்னாவில், 1970-ம் ஆண்டு ஒரு முக்கிய அரசியல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட காங்கிரஸ் அரசுக்கு எதிரான பல தலைவர்கள் கூடியிருக்க, பிஹாரின் அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்கூரும் அங்கு இருந்தார். அப்போது அவர், ஒரு மூலையில் கைகட்டி நின்று கொண்டிருந்த இளைஞனை பார்த்து, “இவன் எதிர்காலத்தில் பெரிய தலைவனாக வருவான். அந்த அளவுக்கு அவனிடம் பேச்சுத் திறமை இருக்கிறது” என்று குறிப்பிட்டு அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். இவருடைய வாக்கு பலிக்கும்படி நடந்து கொண்டிருக்கும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல. இன்று பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் நாயகனாகி விட்ட லாலு பிரசாத் யாதவ் தான் அந்த இளைஞர்.
அரசியல் லாபங்களுக்காக மாட்டுத் தீவன முறைகேடு என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், மாட்டு இறைச்சி தின்றானோ அவன் என்று யாரையும் கொன்றதாக இவர் மீது எந்த முறைகேடுமில்லை. அரசியல் தலைவர் என்றிருந்தாலும் இந்திய அரசியல் தலைவர்களில் மக்களோடு மக்களாய் வலம் வந்து கொண்டிருப்பவர். அரசியல் அழுத்தம் எப்படித்தான் இருந்தாலும், மிக சகஜமாக தாமாஷுகளை வாரி இறைத்து மக்களோடு ஒன்றி இருப்பவர். எளியவர், பண்பாளர், ஜனரஞ்சகமானவர் என்கிற சொல்லுக்கு இன்றைக்கு லாலு மட்டுமே சொந்தக்காரர்..

என்ன செய்தால் எதிரிகளை வேரோடு சாய்க்கலாம் என்கிற திட்டத்தில், அவர் போட்ட கணக்கே இன்றைக்கு பி.ஜே.பி-யின் எல்லா கூட்டல் கணக்குகளையும் குழிதோண்டி புதைத்திருக்கிறது. அன்றைக்கு ரத யாத்திரையை அவ்வளவு தீவிரமாக எதிர்த்தவர் என்கிற நிலையில், இன்னமும் மத துவேஷத்தை, சாதிய வெறியை அரசியலில் கலக்காத மனச் சுத்தம் கொண்டவரும் அவர்தான். விட்டுக் கொடுக்கும் பக்குவத்தால், பக்குவப்படாதிருந்த ஒரு மூர்க்கமான கூட்டத்தின் அழிவுக்கு வித்திட்டிருப்பவர்.

இன்றைக்கிருக்கும் இந்த மதம் சார்ந்த அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா முழுக்கவும் பயணம் புறப்பட இருக்கும் நல்ல மனது கொண்ட ஒரே தலைவர்.
இவ்வளவு நற்பண்புகளைக் கொண்டிருக்கிற லாலு சாச்சா இந்தியாவின் பிரதமராக வந்து விடுவது என்பது நிச்சயமாக அது அவருக்கான பெருமையாக இருக்காது. எத்தனை எத்தனையோ குழப்பங்கள் ஏற்பட்ட பின்னரும், எவ்வித கேடு எண்ணங்களையும் கொள்ளாமல் மக்கள் எல்லோரும் இன்னமும் சகோதரர்களாகவே சேர்ந்து வாழும் இந்திய தேசத்துக்கான ஒரு மகத்தான ஆட்சியாக அது இருக்கும், நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் ஒரு சிறப்பான நிர்வாகமாவும் அது அமையும். ஆரம்பத்தில் இருந்து அத்தனை வருடங்களும் கோடி கோடியாய் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்திய இரயில்வேயை இலாபகரமாக, அதுவும் மக்களுக்கான தேவைகளுக்கென்று ஒரே வருடத்தில் நிலை நிறுத்திக் காட்டியவர் அவர். அவரின் நிர்வாகத் திறமைக்கு இது ஒரு சான்று மட்டுமே.
சாச்சா லாலு பிரதமராக வாச்சா, நாட்டில் மற்றவர்கள் பாச்சா எதுவும் பலிக்காது !

10813_488830407926340_2010597110637474255_nRaheemullah Mohamed Vavar

Advertisements
 
Leave a comment

Posted by on November 11, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: