RSS

கூட்டல் கணக்குகள்

13 Nov

#‎நிஷாமன்சூர்‬

ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் எளிய டீக்கடைமுன் காரைநிறுத்திய பத்துபேருக்குக் குறையாத அந்தக் குடும்பத்தினர் வடையும் பன்னும் பப்சும் என்றவாறு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பின்னர் டீ காஃபி ஆர்டர் செய்தபோது பால் போதாமல் டீக்கடைக்காரர் ஓடிச்சென்று ஓரிரு நிமிடங்களில் பால் வாங்கிவந்து சுடச்சுட போட்டுக் கொடுத்தார்.அதன்பின் கைக்குழந்தைக்கு நன்றாக பாலை ஆற்றித்தரச் சொன்ன குடும்பத்தலைவர் மொத்தம் எவ்வளவாச்சு என விசாரிக்க,
கைக்குக் கிடைத்த நாளிதழின் ஓரத்தில் வேகமாகக் கணக்குப்போட்ட டீக்கடைக்காரர் 149/ ரூபாய்ங்க சார் என்று சொல்ல நூற்றி ஐம்பது ரூபாயைக் கொடுத்த அவர் புன்னகைத்துக் கிளம்பினார்.

கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குப் பிறகு அடுத்த நகரத்தை அண்மிக்கையில் குழந்தைகளில் ஒருவர் பிஸ்கட் கேட்க, குடும்பத்தலைவருக்கு அந்த டீக்கடையில் டீக்கடைக்காரர் பால் வாங்கச் சென்றபோது ஜாடியிலிருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டது நினைவுக்கு வந்து ‘அச்சச்சோ அந்த பிஸ்கட்டுக்கு பணம் கொடுக்க மறந்துட்டனே” என்று சலித்துக்கொண்டு தலையிலடித்துக்கொண்டார்.

அதேகணத்தில் டீக்குடித்த டம்ளர்களை சுத்தப்படுத்திவிட்டு சற்றே ஓய்வாக அமர்ந்த டீக்கடைக்காரர் கண்ணில் அந்த நாளிதழில் கூட்டிய கணக்கு பட, இயல்பாக மனம் கூட்டிப்பார்த்த அவர் “அச்சச்சோ கணக்கைத் தப்பாப் போட்டுட்டனே, 144 ரூபா தான வருது…அஞ்சு ருவா சேத்து வாங்கிட்டனே” என்று சலித்துக்கொண்டு தலையிலடித்துக் கொண்டார்.

அந்த பிஸ்கட் என்ன ஒரு அஞ்சு ரூபா இருக்குமா,சரி பத்து ரூபாயா அந்த டீக்கடைக்காரர் பேர்ல தர்மம் பண்ணிடலாம் என்று சாலையோரம் அமர்ந்திருந்த ஒரு வயதான கிழவியின் தட்டில் பத்து ரூபாய்த்தாளை அந்தக் குடும்பத்தலைவர் போட்டுக்கொண்டிருந்த அதேநேரம் தன் கடை வாசலில் வந்து ஏக்கமாய்த் தயங்கிநின்ற மனநோயாளிக்கு அந்த டீக்கடைக்காரர் ஜாடியிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்..!!

‪#‎அந்த‬ பிஸ்கட்டின் விலை ஐந்து ரூபாய்….

12027700_721276018016318_6282158469249228195_nநிஷா மன்சூர்
Advertisements
 
Leave a comment

Posted by on November 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: