அழ! அழ! இழுத்துப்பிடித்து
பாதங்களில் அமரவைத்து;
நெற்றியின் புருவத்தோடு
கையைத் தடுப்பாக்கி..
குழந்தையைக் கடுப்பாக்கி;
சுடுநீரில் பச்சைத் தண்ணீரைக்கலந்து
பச்சிளம்பிள்ளையின் உச்சந்தலையில்
ஊற்ற – ஊரே கேட்குபடி அவன்
மூச்சுமுட்ட அழ..
பெற்றப் பிள்ளையின் கதறலில்
அடிவயிறு பிசகி நிறைய
எரிச்சலுடன் சொல்லத்துவங்கினேன்..
ம்ம்மா.. பார்த்தும்மா ரொம்ப அழறான்;
ஓரப்பார்வையில் விழித்தப்படி
ஓய்யாரமான புன்னகையில்
பூரித்தப்படி பூரிக்கட்டையால்
அடிப்பதுப்போல என் அம்மா சொன்னார்..
உன்னையும் இப்படிதான்
குளிக்கவைச்சேன் – போடா போ;
வந்துட்டாரு துரை! சொல்றதுக்கு எனக்கு;
Yasar Arafat
Advertisements