RSS

செயல் ஒன்று, விளைவுகள் வேறு !

17 Nov

12247106_665374916938554_4933657620057863560_n

செயல் ஒன்று, விளைவுகள் வேறு !
ஞாயிறு விடுமுறையன்று அடித்துக் கொளுத்திய வெயில், இன்று திங்களில் நேற்றைய வெப்ராளம் முழுவதையும் காட்டியது போல், காலை 6-30-க்கு தொடங்கிய மா மழை பக்க வாத்தியங்களான இடி மின்னலுடன் 10-00 வரை கொட்டித் தீர்த்தது என்பது கம்பாலாவின் மழைக் காட்சி.

பூமத்திய ரேகையின் மேல் அமர்ந்திருப்பதால், முதல் மணிக்கூரில் கடுமையான வெயிலும் அடுத்த மணிக்கூரிலேயே மழை அடித்ததற்கான எந்த தடயங்களும் இல்லாமல் ஆகிவிடுவது, இந்த மண்ணுக்குண்டான எப்போதுமான பழக்கம்.

உகாண்டா வந்தவர் எல்லாம் நம் அரசாங்கங்களிடம் இப்படிக் கூட சொல்லிக் கொள்ள முடியும்தான் – “பூமத்திய ரேகையைத் தாண்டி, நைல் நதியிலேயே தண்ணீர் குடித்தவர்களடா நாங்களெல்லாம், எங்களிடமா, வழுக்கம் பாறையில் வழுக்கி விடாமல் ஏறிய சாகசம் பற்றி கதை சொல்ல வருகிகிறீர்கள்”-என்று.

இன்றைக்கான காலத்தில் புவியில் பல பாகங்களிலும் மழைதான். அளவான மழையில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிம்மதி அடைகிறதென்றால், அளவு மிகுத்த மழை, இயற்கை பேரிடர் என்பதையும் தாண்டி ஆட்சியாளர்களின் அவலத்தையும் அல்லவா தோலுரித்து காட்டுகிறது.

உலகில் மூன்று வகையான நாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன- வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் நாடுகள் என்று. இதில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் உகாண்டா, மிகவும் பின்தங்கிய ஒரு நாடுதான், என்றாலும் இப்போது மணி பகல் 12 வரைக்கும் மழை தூற்றிக் கொண்டிருந்தாலும் சாலைகள் எப்போதும் போலவே போக்குவரத்துக்கு எந்த இடையூறுமின்றி மாறிவிடுவது என்பது, மழைக்கால துயர்கள் மழையால் மட்டும் ஏற்பட்டு விடுபவை அல்ல, ஆளும் அஜாக்கிரதைகளின் அலட்சியத்தாலும்தான் என்றும் நிரூபணமாகின்றது.

தேர்தலுக்காக நாடு காத்துக் கொண்டிருக்கிறதாம். ஆட்சி மாற்றத்திற்காகவா…….
அப்படி வந்தால் 500-லிருந்து 2000 வரை கிடைக்குமே என்கிற கணக்குக் கூட்டலில் இப்போதிருந்தே நம் மக்கள் ஆவலுடன் அந்த மகத்தான நாளை எதிர்நோக்கி இருக்கிற நிலையில், தமிழகம் முழுவதுமே கடலுக்குள் அமிழ்ந்து போவதாக முன்னறிவிப்புக்கள் வந்தாலும் கூட, இன்னும் ஒரு 200 கூடுதலாகச் சேர்த்து நிலுவைத் தொகை போல் கொடுத்து விட்டால், அரசியல் பிழைப்பை தொடர்ந்து கொள்ளும் வாய்ப்பு, குறிப்பாக நம் தமிழகத்தில் இன்னமும் பிரகாசமாகவேதான் இருந்து கொண்டிருக்கிறது.

குடிகள் எவ்வழி, கொற்றவனும் அவ்வழி, வாழ்க தமிழரும் அவர்தம் கூன் விழுந்த முதுகுகளும் !

10858410_509656449177069_5663572308532446822_n

Raheemullah Mohamed Vavar
 
Leave a comment

Posted by on November 17, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: