RSS

பொதுத்துறை நிறுவனங்களின் அவசியம் குறித்து அனுபவப்பூர்வமாக இயற்கை உணர்த்தியிருக்கிறது.

24 Nov

12246736_10208196132050581_3392739479764020769_nகடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி வந்த விஷயத்தை நேற்று சென்னையை முற்றிலும் முடக்கியதன் வழியாக பளிச்சென்று இயற்கை புரிய வைத்திக்கிறது. அதுதான் பொதுத்துறையின் அவசியம். குண்டும் குழியுமான சாலைகள். எங்கும் முட்டி அல்லது இடுப்பு வரை நீர். அப்படியிருந்தும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள் / பார்க்கிறார்கள். பயணிகளை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் / சேர்க்கிறார்கள். தீயணைப்பு படையில் பலர் தொடர்ந்து 48 மணிநேரங்களாக வீட்டுக்கு செல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்ய வெறும் ஹவாய் செருப்புடன் இருட்டிலும் டிரான்ஸ்ஃபார்மர் மீது எந்தவொரு பாதுகாப்பு கருவியும் இன்றி ஏறி மின் ஊழியர்கள் பழுது பார்க்கிறார்கள்.
ஆனால், தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு cab வருவதில்லை. நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டபோது பல ஐடி நிறுவன ஊழியர்கள் cab கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறார்கள்.
வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ரத்தாகி உள்ளன. அரசு பேருந்துகள் மட்டுமே கொட்டும் மழையிலும் இயங்கின / இயங்குகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களின் அவசியம் குறித்து அனுபவப்பூர்வமாக இயற்கை உணர்த்தியிருக்கிறது. இனி தனியாருக்கு இவை தாரை வார்க்கப்படாமல் தடுக்க வேண்டியது சென்னை வாழ் நடுத்தர மக்களின் பொறுப்பு.

Face book 02கே. என். சிவராமன்

 
Leave a comment

Posted by on November 24, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: