RSS

உயர்ந்த மனிதர்கள்

26 Nov

உயர்ந்த மனிதர்கள்

உயர…உயர…

இன்னும்

உயர…உயர…

மேலும்

உயர…உயர…
பறந்த பறவைகள்
பறக்கும் ஆசையை
குறைத்துக் கொண்டன.
காரணம்
சிறகுகள்
பழுதாகி விட்டதால் அல்ல;
சிறகுகள்
சுமையாகி விட்டதால்.

பிறப்பும் சுமை
இளமையும் சுமை.
அது தரும்
பொறுப்பும் சுமை
குடும்பமும் சுமை.

கால ஓட்டத்தில்…

உடலும் சுமை
உள்ளமும் சுமை
உணர்வும் சுமை.
உணவும் சுமை
உடையும் சுமை
உறவும் சுமை.
உற்றமும் சுமை
உடமையும் சுமை
உல்லாசமும் சுமை.

பணிச் சுமை
பொருள் சுமை
புகழ் சுமை…
தரும்,
போதை, சுமை
ஏறுவதால்… வரும்,
தலைக் கனம் – சுமை.
கர்வம் சுமை
அகங்காரம் சுமை
அகம்பாவம் சுமை.
பாவச் சுமை
நிரம்புவதால் வரும்,
நோயும் சுமை.
மன அழுத்தம் சுமை
அது வழங்கும்
இரத்த அழுத்தமும் சுமை.
அழுத்தம் குறைய விழுங்கும்
மருந்தும் சுமை.

சுமைகளையே சுமப்பதால்
முதுமையும் சுமையாகி
ஓயந்து விழ,
சுமை தாங்கும்
நல் சுமைதாங்கியாய்
சுமைதனை தாங்கி,
சுமந்து வந்த
முழுச் சுமைகளையும்
தன் கரங்களில் ஏந்தி,
மார்போடு அணைத்து
உச்சி முகர்ந்து
ஏற்றி வந்த சுமைகளில் இருந்து,
விடுதலை தருவாள்
மரண தேவதை.

“EVERY SOUL HAS TO TASTE THE FLAVOR OF DEATH”

12247081_10205234867579741_5449735561039601725_nVavar F Habibullah
 
Leave a comment

Posted by on November 26, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: