RSS

சிந்தித்தால் – சில நேரங்களில் சிரிப்பு வரும்

13 Dec

உலக நாகரிகம் பிறந்த இடம் கிரேக்கம்.
உலகிற்கு
கல்வியை, கலைகளை
கதைகளை, கணிதத்தை, காவியத்தை
வீரத்தை, விவேகத்தை, விளையாட்டை
ஞானத்தை, தத்துவத்தை பொருளாதாரத்தை
விஞ்ஞானத்தை, மெஞ்ஞானத்தை
பண்பாட்டை, பகுத்தறிவை மருத்துவத்தை
இலக்கியத்தை, இதிகாசத்தை, வேதத்தை
விதியை, மதியை, கவிதையை அனைத்தையும்…….

சொற்கலை, பேச்சுக்கலை எழுத்துக்கலை
விமர்சனக்கலை, விகடக்கலை ஓவியக்கலை
நடனக்கலை, நாடகக்கலை விவாதக்கலை
என ஆயக்கலைகள் அனைத்தையும் உலகுக்கு கற்றுத் தந்த கிரேக்க நாடு…
பெற்றெடுத்த, பிள்ளைகளின் கால்களில் தான் ஒரு காலத்தில் (The whole World ) வீழ்ந்து கிடந்தது.

மகா அலெசாண்டர்
அவன் தந்தை பிலிப்
விஞ்ஞானி ஆர்கிமிடிஸ்
சாக்ரடிஸ்
பிளாட்டோ
அரிஸ்டாடில்
கணித மேதை பிதாக்ரஸ்
தத்துவ மேதை அரிஸ்டோபேன்
டெமாக்ரடிஸ்
எபிகியூரஸ்
ஹீரோடோடஸ்
மருத்துவ தந்தை ஹிப்போகிரடிஸ்
ஹோமர்
கான்ஸ்டன்டைன்
ஓட்டோ
இவர்கள் சொல்லி சென்றதெல்லாம்
இப்போது, கிரேக்க நாட்டுக்கே பயன் தரவில்லை.கிரேக்கம் பெரும் பொருளாதார சீரழிவில் சிக்கி திணருவதை எண்ணும் போது…….இந்த உலக மகா மேதைகள் – கற்றுத் தந்தவை எல்லாம் பயனற்றுப் போயினவோ, என எண்ணத் தோன்றுகிறது.
இப்போதெல்லாம் இந்த மேதைகள் எழுதிய புத்தகங்கள் என்னை அதிகம் கவருவதில்லை.
காரணம், இவர்கள் போதித்த உன்னத உண்மைகள் – அவர்கள் நாட்டு மக்களுக்கே பயன்தராத போது இதனால் யாருக்கு என்ன பயன்.

12373411_10205320789367732_3666444640321097707_n
Vavar F Habibullah
 
Leave a comment

Posted by on December 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: