இருப்பிடம் இல்லா மக்களுக்கும் ..
இனி பனிக்காலம் ….
எங்கே சென்று அணைவார்? .
எதைக்கொண்டு உலைவைப்பார் ?..
நடுங்கும் குளிருக்கு போர்வை தந்தோரே …
இருப்பிடம் தருவீரா ?…
மூவேளை உணவிட்டோரே …
ஒரு வேலை தருவீரா ?…
பள்ளி திறந்துவிட்டு ..
புத்தகங்கள் தருவீரா ?…
அடுத்தடுத்து வரும் செலவுகள் ..
அனைத்தையும் பார்ப்பீரா ?..
மகளுக்கு திருமணத்தை ..
நடத்தியே முடிப்பீரா ?…
இனி ,மெல்ல சாகுமோ ..
இடையில் மாட்டிக்கொண்ட நடுத்தர வர்க்கம் !…
இலவசங்கள் தந்து …
சோம்பலையும் தந்தவர்கள் …
சாராயம் புழங்கவிட்டு ..
சாக்கடையில் உழலவிட்டவர்கள் ..
இனி ,
என்ன செய்வதாய் உத்தேசம் ?….
புறம்தள்ளப்பட்ட நடுத்தர வர்க்கத்தையும் ..
புதிய கண்கொண்டு பாருங்களேன் ,இனி !…
மேலும் இல்லாமல் ..கீழும் இல்லாமல் ..
பொறியில் மாட்டிக்கொண்ட எலிகள் அவர்கள் …
பாவம் ..இனிதான் …
அவர்கள்பாடு பெரும் திண்டாட்டம் !…
-ஜே .பானு ஹாரூன் J Banu Haroon