RSS

மெளனமாய் ஒரு மணப்பெண்ணைப் போல்…

28 Dec
Mohamed Salahudeen

1377439_10153817499881565_8635121692171744312_n

சிறார்கள்
நதியில் கல்லெறிந்து
சிறுக சிறுக
பெருகும் வட்டங்களில்
மகிழ்ச்சியடைகிறார்கள்

நீருடலைக் கிழித்து
விசைப்படகுகளில்
பயணித்து மகிழ்கின்றனர் சிலர்

தூரத்துப் பகுதியிலிருந்து
பொருட்களை சுமந்து வருகின்றன
சரக்குக் கப்பல்கள்

இரவு நேரத்து கேளிக்கைகளுக்கு
தயாராகி நிற்கின்றன
சொகுசுப் படகுகள்

நதியைக் கண்டு மகிழ
வந்திருப்பவர்களில்
சில வாடிக்கையாளர்களை
எதிர்நோக்கி
ஏக்கத்தோடு
காத்து நிற்கின்றன
குதிரை வண்டிகள்

கரையோரமெங்கும்
விருந்தினர்களுக்கான
நட்சத்திர விடுதிகள்
வரிசையாய்
நதியை நோக்கிய
ஜன்னல்களோடு
நிறகின்றன.

நெரிசல் மிகுந்த
மாலை நேரத்தில்
மெல்ல மெல்ல ஊர்ந்து
பாலங்கள் வழியே
கடந்து செல்கின்றன வாகனங்கள்

மாலை நேரத்து
தங்கக் கதிர்களை
நதிகளில் வீசி
மறைந்துக் கொண்டிருக்கிறது
சூரியன்

காலங்காலமாய்
காதலர்கள்
அதன் கரையோரங்களில்
பேசிக்கொள்ளும்
காதல் மொழிகளை
கண்டுங்காணாமல்

பயணிக்கும் பாதைகளை
பச்சை வண்ணமாய்
செழிப்பாக்கி..
அதன் கரைகளில்
வாழும் மக்களை
வளமாக்கி..

மெளனமாய்
ஒரு மணப்பெண்ணைப் போல்

மெல்லக் கடந்து
சென்றுக் கொண்டிருக்கிறது
நைல் நதி.

10665123_10152747318201565_6451689015853090555_n

Mohamed Salahudeen

My Heartiest Wishes to Salaahudeen/வாழ்த்துகள்

Enchanting Egypt – எழில் தரும் எகிப்து.

Advertisements
 
Leave a comment

Posted by on December 28, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: