RSS

சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் முகநூலில் கடைசிபதிவு

03 Jan

விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில் மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
சகலத்தையும் இழந்து நிற்கும் சக மனிதன் குறித்த கவலையின்றி எப்படி கும்மாளம் போட முடிகிறது ?
அறிவுக்கு பொருத்தமில்லாத, பொருளாதார விரயம் செய்கின்ற இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த உங்களின் பசிக்கு உணவளித்த உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும் நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
விழாக்களின் பெயரால் வீண்விரயமற்ற
ஒழுக்கமுள்ள, மக்களுக்கு பயனுள்ள
ஒரு சமூகத்தை உருவாக்க வாருங்கள் !

-செங்கிஸ்கான்
++++++++++++++++++++++++++++++

1509677_1943795932511687_8190565441051166896_n
இறைவா! யாஅல்லாஹ்
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும்,
இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக!
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
இவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் அழகிய பொறுமையைவழங்குவானாக ஆமீன்.

Abdul Kareem

மதமாற்றம் அல்ல! மன மாற்றம் – செங்கிஸ்கான் !
*******************************************************************


இஸ்லாத்தை பற்றிய பிற மத மக்களின் கேள்விகளுக்கு மிக எளிமையாக. அழகான, ஆதாரங்களுடன் பதில் அளித்து அவர்களை அன்போடு அரவணைத்துக்கொள்கிற , அவர்களை நல்லிணக்க செய்திகளால் மகிழ்ச்சியுற செய்த ஒரு நல்ல உள்ளம் எனதருமை சகோதரர் செங்கிஸ்கான். அவர்களின் தஃவா செய்திகள் அனைத்தும் நூலாகவும் , ஆவணமாகவும் ஆக்கப்படவேண்டும்
– தக்கலை கவுஸ் முஹம்மத்

 
Leave a comment

Posted by on January 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: