RSS

மனக்காயத்திற்கு மருந்து …

08 Jan

-ஜே .பானு ஹாரூன்

மனசு ஊனப்படுமுன் தகாத வார்த்தைகள் சொல்லும் பிறரிடமிருந்து நம்மையும் ,தவறுக்கு துணை போகாமல் நம் நாவையும் காத்துக் கொள்வோம் .

வீண்பழி சுமத்தும் சில்லறைகளை வீணே எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம் .மடியில் கணம் கொண்டவனே காலமெல்லாம் கவலைப்படவும் ,.பயப்படவும் வேண்டும் .

தப்பை பிறரறியாமல் செய்வது நாம் தப்பிக்கும் நோக்கம் மட்டுமல்ல .உண்மையில் இறைவனை மறந்த பாவம் !…

வாங்கிய கடன்களை ஏமாற்றாமல் திருப்பி செலுத்துவது நம் தலையாய கடன் .இல்லையெனில் பின்னாளில் வேறொரு கடன் சுமை நம் தலையின் மீது சுமத்தப்படும் .

குறை ,நிறைகளுடன் இணையை ஏற்றுக்கொள்வது துணையின் கடமை .விரைவில் குறைகளை குறைத்து நிறைகளை நிறைத்து துணையுடன் இணைவது இணையின் கடமை .

தன் பசிக்கு மட்டும் தானே நல்ல உணவுகளை தேடுவது மடமை …மற்றவர் உண்ண தேடித்தருவதும் மகிமை .பசியறிந்து உணவு படைப்பது கடமை .தாய்மையும்கூட ..

திருமணத்திற்கு முன் கன்னி .கணவனுடன் இணைந்தபின் அந்த குடும்பத்தின் இரண்டாவது அன்னையாகிறாள் ஒரு பெண் .

அமானிதம் என்பது நம் வீட்டில் பிறக்கும் பெண்குழந்தைகளும் ,நாம் வைத்திருக்கும் பிறரின் சொத்துக்களும் தான்.உரிய நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்தலே நம் தலையாய கடமை .கடமை தவறுபவர்களும் ,நயவஞ்சகர்களும் இறைவனின் கோபப் பார்வையிலிருந்து தப்புவதில்லை …

10406769_331120727042074_4328465882605504469_n-ஜே .பானு ஹாரூன்

J Banu Haroon

Advertisements
 
Leave a comment

Posted by on January 8, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: