RSS

சாலையோர சாயாக் கடைகளில்…

10 Jan

Abu Haashima

12522932_944465472298849_8503999941609191904_n

சாலையோர
சாயாக் கடைகளில்
உள்ளி வடை
மிளகாய் பஜ்ஜி
வாழைக்காய் பஜ்ஜி
உருளைக் கிழங்கு போண்டா
முட்டை போண்டா
உளுந்து வடை
பருப்பு வடை
மோதகம்
அதிரசம்
பணியாரம்
ஏத்தம்பழ அப்பம்
ஆட்டுக்கால் கேக்
சாப்பிடும் வாலிப வயோதிக அன்பர்களே!
சுடச்சுட பொரித்து வைக்கப்படும் பலகாரத்தை பார்த்த உடனேயே
உங்கள் வாயில் எச்சில் ஊறுதா ?
கடைக்காரர் துண்டு பேப்பரில் பலகாரம் வைத்துத் தருகிறாரா ?
அதில் பஜ்ஜியை அல்லது வடையை வைத்து எண்ணெயை பிழிகிறீர்களா ?
அதன் புறகு ருசித்து சாப்பிடுகிறீர்களா ?
சபாஷ் …
நல்லா சாப்பிடுங்க.
நீங்க வடையை வைத்திருக்கும்
பேப்பர் இருக்கே பேப்பர் …
அது …
எங்களைப் போன்றவர்கள் மாதக்கணக்கில் சேர்த்து வைத்து
எடைக்குப் போடும் பேப்பர்.
அந்த பேப்பர்களில்
பாச்சான்
பல்லி
எலி
பெருச்சாளி
சிலந்திகள்
வவ்வால்கள்
பூனைகள்
எச்சம் போட்டிருக்கும்.
சிறுநீர் கழித்திருக்கும்.
ஓடி விளையாடி இருக்கும்.
இந்த பேப்பரைத்தான் டீக்கடைக்காரர்கள்
விலைக்கு வாங்குகிறார்கள்.
அந்த பேப்பரை சின்னச் சின்ன
துண்டுகளாக வெட்டித் தரும்போது
அதில் இந்த அசிங்கமெல்லாம்
கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை..
பஜ்ஜியில் இன்னைக்கு உப்பு கொஞ்சம்
சுள்ளுன்னு இருக்குன்னு நீங்க சொல்லுவீங்க.
ஆனா ..
அது டீக்கடைக்காரர் போட்ட உப்பா இருக்காது.
திருவாளர் பூனையார் ஊத்துன உப்பாத்தான் இருக்கும்.
நாளடைவில்
அந்த பல்லி பாச்சான் பூனை டேஸ்ட்
உங்களுக்கு ரொம்ப புடிச்சுப் போகும்.
சாயங்காலம் ஆனா …
வாய் சும்மா இருக்காது.
பஜ்ஜி வடை சாப்பிடச் சொல்லும்.
நாளடைவில்
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
அவஸ்தை பட்டு ஆஸ்பத்திரிக்கு போகும் நிலை ஏற்படும்.
அதை தவிர்க்க வேண்டுமானால்
எந்தக் கடையிலேயும் பஜ்ஜி வடை
பேப்பரில் வைத்து சாப்பிடாதீர்கள்.
கடை பலகாரம் சாப்பிடாமலே இருப்பது
ரொம்ப உத்தமம்.

Abu Haashima  அபூ  ஹாஷிமா வாவர்Abu Haashima

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: