RSS

நம் வீட்டு சிறுவர்கள் ..

10 Jan

J Banu Haroon

ஆழ்மனதில் ஊன்றி வளரும் எண்ணங்களே பிற்காலத்தில் ஆல விருட்சமாக வளர்ந்து காலப்போக்கில் நல்லவராக ,தீயவராக நம்மை வெளிப்படுத்துகிறது .

நல்ல செல்வங்கள் என்பவை நம் பேங்க் லாக்கர்களில் உள்ளவை அல்ல .நாம் பெற்ற மக்கட் செல்வங்களே .
வீட்டு சூழலில் ஒன்றி வளரும் பிள்ளைகளை விட வெளிவட்டாரத்தில் அதிக நேரம் செலவிடும் பிள்ளைகள் விரைவிலேயே பிற தவறான பழக்க ,வழக்கங்களை கற்றுக்கொள்ள முடியும் .


கவனமான தாய்மார்களின் பார்வையிலிருந்து தவறுகள் எதுவும் தப்புவதில்லை .பிள்ளைகளின் மீதுள்ள அதீத பாசமும் ,நம்பிக்கையும் தவறுகளை மூடிமறைக்கச் சொல்லும் .இதுவே பெரும் தப்புகள் நடக்க வழிவகை செய்துவிடும் .
பிள்ளைகளை சீர்திருத்தி வளர்ப்பது அவர்களின் நல்ல எதிர்காலத்திற்காகத்தானே தவிர ,மற்றவர்களுக்காக அல்ல .அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு பயந்து தவறுகளை மறைத்துப் பழக ஒருபோதும் துணியாதீர்கள் .

புகைபிடித்தல் ,மது ,போதைகளை கற்றுக்கொள்ளல் ,கஞ்சா போன்ற பிற வஸ்துக்களை பாவித்தல் ,தவறான பெண்களுடனான பழக்கங்கள் போன்ற சமூக சீர்கேடுகள் எல்லா மட்டத்தினருடனும் உடனடியாக உள் நுழைக்கப் படுகின்றன .
நம் பிள்ளைகளிடம் தவறுகள் தலை தூக்கினால் அழுது புலம்பி ஒளித்து மறைத்து அடுத்தவருடன் ‘என் பிள்ளை அப்படியில்லை ‘என்று சண்டைக்கு போகாமல் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் கவுன்சிலிங் கொண்டு செல்லுங்கள் .தெரியாதவர்களுக்கு மற்ற தெரிந்தவர்கள் உதவிடுங்கள் ,தயவுசெய்து …
கூட்டுப் பிரார்த்தனைகள் என்கிற பெயரில்’ டீன் ஏஜ் ‘வயதில் உள்ளவர்களை பலநாட்கள் வெளியூர் அனுப்புவதை நிறுத்துங்கள் .படிப்பு கெடும் .படித்து முடித்தவர்கள் இண்டர்வியூ போகும் காலங்களில் இது போன்ற தவறுகள் செய்ய வேண்டாம் .வேலை தேடுவது தடை படும் .வாழ்க்கை கெடும் .
-ஜே .பானு ஹாரூன்

J Banu Haroon

 
Leave a comment

Posted by on January 10, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: