காலைப் பனித்துளி கதிர்களில் ஆட–அதை

Malikka Farook

12509719_1039457909423517_2599623278447761769_n

காலைப் பனித்துளி கதிர்களில் ஆட–அதை
கண்ட என்கண்கள் கும்மாளம் போட
மகிழ்வென்னும் சோலைக்குக்குள்
மகிழம்பூவாய்,,,

சூரியனின் சூடு சுல்லென்று சுட –அதை
சில்லென்ற காற்று வருடி விட
சுறுசுறுப்பாகுமுடல்கொண்டு
பறக்கும் சிட்டாய்

அந்திவானம் மஞ்சள் அரைக்க
அதை அவசரமாய் கறுத்த மேகம் மறைக்க
மூடியிருந்த முக்காட்டை கிழித்துக்கொண்டு
எட்டிப்பார்க்கும் ஒளிக்கதிராய்,,,

இருண்ட வானத்தில் சின்னதாய்
சிதறிக்கிடக்கும் மின்மினி நட்சத்திரங்களோடு
உன்னதவானில்உலாவரும் வெண்ணிலவாய்,,

கறுத்து வெளுத்த மேகங்களோடு- மின்னல்
கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்துடன்
பட்டாளத்து வெ[இ]டிச்சத்தங்களோடு
வெள்ளைமழையின் கொள்ளை வருகையாய்,,,

அடர்ந்த காட்டுக்குள் குயில்கள் கானமிசைக்க
அங்குள்ள மரங்களெல்லாம் தானாடிக்களிக்க
தலைகோதும் தென்றலோடு
ரிங்காரமிட்டு மகிழும் சில்வண்டாய்,,,

மலைக் காதலி வெள்ளையருவி
தண்ணீரையெல்லாம் மண்ணுக்கு
தானம் தரும்வேளை அதனிலிருந்து
விழுந்தெழும் வெண்பஞ்சு புகையாய்

வெட்டவெளி புள்வெளியில்
வெயிலற்றுக்கிடக்கும் நிலவொலியாய்
உற்றுறைந்து உள்ளம் தொட்ட உன்னை
உள்ளம்பூட்டி சிறையிட்டுக்கொண்டேன்

உதிரம்தன்னில் உணர்வு சுரக்க
உறவின் உயிராய்
உனை மணந்துகொண்டேன்
உலகே உனக்குளென மனமும் கொண்டேன்…
……

598629_504293416273305_642685647_n

Malikka Farook

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment