RSS

இப்படி ஒருபாடல் இதுவரை வெளிவர இல்லை என்று நினைக்கிறேன்

28 Jan

கவிஞர் அஸ்மின்

நான் எழுதியுள்ள இந்தப்பாடலில் வாரத்தின் 7 நாட்கள் வருடத்தின் 12 மாதங்கள் அடங்கியுள்ளன. பாடலுக்குள் காதல் கருவாகி குழந்தை உருவாகி நிற்கிறது எப்படி என்று பாருங்கள்.நான் அறிந்தவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒருபாடல் இதுவரை வெளிவர இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள்.
பல்லவி
ஆண்:
ஞாயிறே ஞாயிறே
நானுந்தன் ஞாயிறே….
வாழ்கிறேன் உயிர்
வாழ்கிறேன்
நீவிடும் மூச்சிலே…
திங்களே
செவ்வாய் சுகம்தானா
புதனிலே
வியாழன் கிடைப்பானா
வெள்ளியாய் அவனும் வந்தால்
போகும்
சனிதானா….
பெண்:
ஞாயிறே ஞாயிறே
நீஎந்தன் ஞாயிறே….
வாழ்கிறேன் உயிர்
வாழ்கிறேன்
நீவிடும் மூச்சிலே…
திங்களின்
செவ்வாய் சுகம்தான்டா
புதனிலே
வியாழன் கிடைப்பான்டா
வெள்ளியாய் அவனும் வருவான்
போகும்
சனிதான்டா
‪#‎சரணம்‬:
பெண்:
தையிலே விழியில் தைத்தாய்
நெஞ்சிலே காதல் வைத்தாய்
மாசியில்
மாலை மாற்ற
தேகம் மாற்றினாய்…
ஆண்:
பங்குனி மாதம்
ஒருநாள்
பசியினை
தூண்டிப்போனாய்
செங்கனி வேண்டுமென்றேன்
உன்னை நீட்டினாய்…
பெண்:
சித்திரை வெயிலுக்குள்ளே
சிந்திய வியர்வையெல்லாம்
முத்தென மாற என்னை
முழுமையாக்கினாய்…
ஆண்:
வைகாசிமாதம்
வந்த
வைத்தியர்
பையன் என்றார்
நொடியிலே
அன்பே என்னை
சொர்க்கமேற்றினாய்
பெண்:
ஆணியில்
ராணிபோலே
ஆடினேன்
உந்தன் மேலே
தேனியே
என்னை உந்தன்
நெஞ்சில் சூடினாய்..
ஆண்:
ஆடியில் வாடிப்போன
அழகியே உந்தன்
உள்ளே உதைக்கிறான்
பையன் என்று
என்றும் கூறினாய்.
பெண்:
ஆவணி மாசம் கூட
அன்புடன்
பார்த்துக் கொண்டாய்
மயங்கிடும் நொடியில்கூட
என்னை தாங்கினாய் …
ஆண்:
புரட்டாதி மாசம் ஒருநாள்
உடைந்துநான்
வீழ்ந்தபோது விடுங்களேன்
ஜெயிப்போம் என்று
என்னை தேற்றினாய்
பெண்:
ஐப்பசி மாசம் பலநாள்
சமையலே நீ செய்தாய்
பசித்திடும் நேரமெல்லாம்
சோறு ஊட்டினாய்….
ஆண்:
கார்த்திகை மாசம் ஒருநாள்
கனவிலே
பிள்ளையென்றாய்
எப்படி இருந்தான்
என்றேன் என்னைக் காட்டினாய்
ஆண்:
மார்கழி மாசம் தோன்ற
மார்பிலும் வலிகள் தோன்ற
வழியிலே
விழியை வைத்து
உன்னை தேடினாய்…

12647318_10153590408638591_7072900405710620865_n

கவிஞர் அஸ்மின்

Advertisements
 
Leave a comment

Posted by on January 28, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: