RSS

Monthly Archives: February 2016

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்…

Bismillah_2நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on February 29, 2016 in 1

 

கைகுலுக்கல்

வெளிநாட்டிலிருந்து வந்த பழக்கமாக இருக்கலாம். அதனால் என்ன… உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல பழக்கமாக இருந்தால் நமதாக்கிக் கொள்வதில் தவறேதும் இல்லை?
(வணக்கம்தான் தமிழ்ப் பண்பாடு….. வகையறாக்கள் இப்போதே ஒதுங்கிக் கொள்ளலாம்.)
கை குலுக்கல்களில் பல வகைகள் உண்டு. இதைப் பற்றி எப்போதோ ஏதோவொரு புத்தகத்தில் படித்த நினைவு. கை குலுக்கல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அதில் படத்துடன் காட்டியிருப்பார்கள். கொடுக்கும் கையைப் பொறுத்தே ஆளை மதிப்பிடலாம் என்று விளக்குவார் நூலாசிரியர். டெட் ஃபிஷ் ஹேண்ட் ஷேக் என்று ஒரு வகை. அதாவது, உணர்ச்சியே இல்லாமல் இருக்குமாம். அந்த மாதிரி ஆட்களை நம்பக்கூடாதாம். அழுத்திக் குலுக்கினால் தன்னம்பிக்கை உடையவராம்.
சுஜாதா கூட ஏதோவொரு கட்டுரையில், இப்படி அரைகுறையாகப் படித்துவிட்டு, அழுத்திக் கை குலுக்கி கையை நெறிப்பவர்கள் குறித்து கிண்டல் செய்து எழுதியிருப்பார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 27, 2016 in 1

 
Gallery

அறிந்தவர்களில் சிலர்

 
Leave a comment

Posted by on February 24, 2016 in 1

 

இது பஹ்ரைனில் நடந்த சம்பவம்:


ஒரு சில நாட்களுக்கு முன் தனீஷ் என்ற மலையாளி அன்பர் தெருவில் 80,000 தீனார் கண்டெடுத்ததாகவும் (1.44,00,000 ரூபாய்) அதை அப்படியே இங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் செய்தி வாட்ஸ்-அப், மற்றும் முகநூல் ஊடகங்களில் பரவியது. அந்த மனிதரின் நேர்மையும் விசுவாசத்தையும் அறிந்து எல்லோரும் வியந்தார்கள். பத்திரிக்கைகளில் அவருடைய புகைப்படத்தைப் போட்டு “Man Wins Heart with his honesty” என்ற தலையங்கத்துடன் அவரது சாதனையை அவருடைய புகைப்படத்துடன் விளக்கியிருந்தார்கள். இங்குள்ள ஏராளமான கேரள அமைப்புகள் தனீஷுக்கு விருது அளித்து கெளரவித்தனர்.

அந்த பணத்தை உண்மையிலேயே கண்டெடுத்தது பாவப்பட்ட ஒரு தமிழர். இவர் பெயர் கருப்பையா. ராமநாதபுரம் மாவட்ட்டத்திலுள்ள முள்ளி முனை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடலில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர். அவர் கண்டெடுத்த கைப்பையில் கட்டுக்கட்டாக பணமும், உரிமையாளரின் பாஸ்போர்ட்டும் இருந்தது. இந்த சம்பவம் நடைபெற்றது கோல்டு சிட்டி அருகிலுள்ள பாம்பே ரெஸ்டாரண்ட்டுக்கு முன்பு. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 24, 2016 in 1

 

நீங்கள் வலிமையான மனிதர்தான் அர்னாப். ஆனால் நீங்கள் இந்தியா அல்ல – சீமா முஸ்தஃபா

arnap(மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்:)

நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த தேவதூதனைப் போல்தான் முன்னிறுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அதீத சிந்தனையில் அன்று எந்தக் குடிமக்கள் வருகிறார்களோ அவர்களைப் பற்றிய மதிப்பீட்டில் இறங்கி, அவர்களுள் ஒருவரை தேசியவாதியாகவும், மற்றொருவரை தேசவிரோதியாகவும் அறிவிக்கிறீர்கள்.

இதுதான் ஒரு பத்திரிக்கையாளரின் வேலையா அர்னாப்? எனக்குத் தெரிந்த இதழியலில் அப்படி இல்லை? என்னை நம்புங்கள். நான் இதழியல் துறையின் அடிமட்டத்திலிருந்து மேல் வந்தவள். பீட் (beat) என்று பத்திரிக்கையாளருக்கு ஒதுக்கப்படும் துறைகள் எல்லாவற்றிலும் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் புத்திசாலித்தனமான பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் வேலை செய்திருக்கிறேன். எனக்கு என் கருத்தை எழுதும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு குடிமகனின் தேசிய உணர்வைக் கேள்வி கேட்கும் உரிமை நிச்சயமாக இல்லை. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 20, 2016 in 1

 

2015-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்

2015-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர் விருதளித்து, அங்கீகரித்து ஊக்கமூட்டிய விகடனுக்கும், இதற்கான களத்தையும் சுதந்திரத்தையும் நல்கி வரும் புதிய தலைமுறை நிர்வாகத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

என் கரங்கள் பற்றும் கோப்பையைத் தங்கள் கரங்களில் கண்டு நெகிழ்ந்து, மகிழ்ந்து, உச்சிமோந்த எண்ணற்ற தூய நண்பர்கள் என் பேறு. சோர்வுறும் தருணங்களில் எல்லாம், நீதிக்காக சலியாது போராடும் எளிய மனிதர்கள் பலரின் ஈடற்ற அன்பே எனை இயக்கும் உந்துசக்தி. சொற்களால் ஊக்கமூட்டிய பல்துறை ஆளுமைகளுக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் என் இதய நன்றி. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 20, 2016 in 1

 

உகாண்டா …அவன் பயணத்தை தொடர்கிறான் !

அன்பு உள்ளங்கள் வாட்ஸப்பிலும்,முகநூலிலும் உகாண்டா தேர்தல் குறித்த எச்சரிக்கை செய்திகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்..

எல்லா தேர்தல்களிலும் இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலை இங்கு நிலவினாலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் மக்களை ஒரு டென்ஷனான நிலைக்கு தான் ஆளாக்கி இருக்கிறது..

இரு இந்தியர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள்..அது ஒன்றும் புதிதல்ல.

முன்பு ஒரு காடு பிரச்சனையில் அவர்களிடம் அடி வாங்காமல் தப்பி வந்த அனுபவம் எனக்குண்டு..அதன் பிறகு அந்த வழியே வந்த இன்னொரு இந்தியர் பலமாகத் தாக்கப் பட்டார்.இன்னொருவர் கொல்லப் பட்டார்..அதனால் சந்தர்பங்களை எதிர்பார்த்து பலரும் உள்ளனர்.. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 16, 2016 in 1