RSS

ஜெசிலா பானு வசந்தம் இணைப்பிதழில் / COMING SUNDAY (07.02.2016) IT’S Jazeela Banu DAY

03 Feb

12662616_10208676118409940_7602900702401874284_nCOMING SUNDAY (07.02.2016) IT’S Jazeela Banu DAY
ஜெசிலா பானு செய்திருப்பது மகத்தான காரியம்தான். போற்றப்பட வேண்டியதுதான். அதனாலேயே ‘தினகரன் வசந்தம் இணைப்பிதழில் அவரை பேட்டி கண்டிருக்கிறோம்.
என்றாலும் ஹமீது சாருக்கு முதல் வணக்கத்தை தெரிவிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட மனம் இடம்கொடுக்கவில்லை.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் நாளிதழ் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்தவர். அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் அறிமுகமானவர். ஆனால், குறிப்பிட்ட ஒன்றிரண்டு வாசகர்களைத் தவிர வேறு யாருக்கும் இவரை தெரியாது. மற்றவர்கள் எல்லாம் ஹமீது சார் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பார்த்திருப்பார்கள். வியந்திருப்பார்கள். மற்றபடி இவரது பெயர் அண்டை வீட்டினர் கூட அறியாதது.
ஒருவகையில் நாளிதழ்களில் பணிபுரிபவர்கள் வாங்கி வந்த வரம் அல்லது சாபம் என்று இதை சொல்லலாம். வார பத்திரிகைகளில் வேலைப் பார்க்கும் நிருபர்கள் + புகைப்படக் கலைஞர்கள் மீது படும் வெளிச்சத்தில் அரை சதவிகிதம் கூட நாளிதழ்களில் பணிபுரியும் நிருபர்கள் + புகைப்பட கலைஞர்கள் மீது வாழ்நாள் முழுக்க படியாது.
அது குறித்து இவர்கள் வருந்துவதும் இல்லை. புகழற்ற புகழுக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பூஜையறையை எதிர்பார்த்து மலராத காட்டுப் பூக்கள் மாதிரி.
அப்படிப்பட்டவர்களில் ஒருவராக வாழ்ந்து இளைய தலைமுறையை சேர்ந்த எங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழ்பவர்களில் ஒருவரான ஹமீது சாரின் புதல்வி மட்டும் எப்படி சும்மா இருப்பார்?
புகைப்பட கலைஞரின் கைகளை பிடித்து வளர்ந்த பிஞ்சு விரல் –
க்ளிக்குக்கு பதில் புத்தகம் எழுதியிருக்கிறது!
அதுவும் மார்க்கத்தின் மேன்மையை உணர்த்தும் சிறுவர் கதைத் தொகுப்பை.
அதுதான் ‘நம் நாயகம்’ நூல். Bedtime Storiesன் அபாரமான தமிழ் வெர்ஷன்.
இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பை எந்தளவுக்கு எளிமையாக விளக்க முடியுமா அந்தளவுக்கு விளக்கியிருக்கிறார்.
+2 முடித்துவிட்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் டிடிபி ஆப்பரேட்டராக பணியில் அமர்ந்து, தபால் மூலம் பட்டப்படிப்பை முடித்து, வேலை தேடி துபாய்க்கு சென்று, இன்று arabic பத்திரிகை ஒன்றின் சர்க்குலேஷன் மானேஜராக ஜெஸிலா பானு உயர்ந்திருக்கிறார். கூடவே துபாய் எஃப்.எம்.ரேடியோவில் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
நிச்சயம் இவை எல்லாம் சாதாரணமான செயல்கள் அல்ல.
அதனாலேயே இஸ்லாமிய நடுத்தரவர்க்க பெண்களுக்கு இன்று ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.
ஜெஸிலா பானுவின் முழுமையான பயணத்தை அறிந்துக் கொள்ள, வரும் ஞாயிறு (07.02.2016) ‘தினகரன்’ நாளிதழுடன் வெளியாகும் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழை வாசிக்க மறக்காதீர்கள்.

Face book 02

கே. என். சிவராமன்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: