RSS

அத்தைக்கு மீசை

08 Feb

தேர்தல் திருவிழா வருகிறது
தேற்றிக் கொள் தோழா !

இலவசத்தில் பரவசம் கண்டது
இனியாவது அடங்கட்டும் !

வாய்ச்சவடாலில் வழுக்கிவிழுந்தது
வரும் தேர்தலில் விளங்கட்டும் !

காமாலைக் கண்ணனாய்
காலந்தள்ளியது போதும் !

புத்தி புரண்டு போஸ்டர் ஒட்டியது
போலிகளுக்கென்று புரியட்டும் !

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீண்டு வா தோழா !

சட்டசபைக்குள் நுழையவேண்டி – உன்
சட்டைப்பையை நிரப்புவார்கள் !

திருவோடு ஏந்தினாலும் பரவாயில்லை
ஓட்டுக்காக உன்னை விற்றுவிடாதே !

வாக்களித்து இவர்களுக்கு
சாக்காடுதான் மிச்சம் !

வாக்குகளை ஆராதிக்கும் இவர்கள் – உனை
தீக்குளிக்கவும் வைப்பார்கள் !

கூடாத நட்புகளும்
கூட்டணிக்குள் கரைந்துவிடும் !

தீராத உன் பிரச்சினைகள் – இவர்கள்
தீர்த்துவைக்கப் போவதில்லை !

உனக்கு –
கலர்க் கனவுகளை காட்டத்தான்
இந்த கலர் டி.வி !

உன்னை –
சுற்றலில் விடத்தான்
இந்த மின்விசிறி !

அரைத்த மாவையே
அரைத்து விட்டார்கள் – உனக்கு
கிரைண்டர் கொடுத்து !

விடிவுகாலம் வருமென்று
விழித்திருக்கின்றாயோ..?

அத்தைக்கு மீசை
எப்படிப்பா முளைக்கும்..?

– அப்துல் கையூம்

da91709c8f408551bcc902767771eea6
அப்துல் கையூம்
Advertisements
 
Leave a comment

Posted by on February 8, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: