RSS

இளஞ்செம்பட்டினை எடுத்துடுத்திய வானமகள்

09 Feb

 

12705469_661851653956875_3400909884442845393_n

இளஞ்செம்பட்டினை
எடுத்துடுத்திய வானமகள்
தம் ஒளி முந்தானைத்
தலைப்பெடுத்து………
இரவெலாம் நிலவருவியில்
நீராடிய புற்ப் பூண்டுகளின்
தலைத் துவட்டிப் பாடும்
பூபாளத் தாலாட்டு……..
அதோ…
விருட்சக மேடையில்
விரைவில் அரகேற்றம்
காணவிருக்கும்
பறந்துச் செல்லும்
பாகவதக் பறவைகளின்
ஆலாபனை…….
காற்றலை வரிசையை
சரிபார்க்க காகங்களின்
ஹலோ… மைக் டெஸ்டிங்
சோதனைக் குரல்…
நேற்றுப் பூவிழந்த
செடி கொடிகள்
தலைப்பூக்களைச்
சூடிக்கொண்டுக்
காத்திருக்கும்
மறுமண விழாவிற்க்கான
அணிவகுப்பு………..
எல்லாவற்றையும்
எட்டிப் பார்த்துக்கொண்டே
என்னவள் தந்த
தேநீர் குவளையோடு
இன்றைய அதிகாலையில்
நான்……….!!

தமிழ் பிரியன் நசீர்
 
Leave a comment

Posted by on February 9, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: