RSS

மகனை தடுக்கிறாரா தந்தை?

10 Feb

 

12669544_1225345374159703_5356744887945212033_n

ஸ்டாலின் முன்னேற விடாமல் கருணாநிதி தடுக்கிறார் என்று மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா.

சென்னையில் இன்று அதிமுகவினர் சிலருக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர், ஒரு குட்டிக் கதை மூலம் இந்த குற்றச்சட்டை வெளியிட்டார்.
கதை இது:

ஒரு பையன் தனது தந்தையிடம் சென்று, ”அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடு” என்கிறான்.

“மகனே, அரசியல் பணி ஆபத்தானது. இதில் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். தந்தை.

மகன் கேட்கவில்லை. ”உங்களை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றான்.

வேறு வழியின்றி தந்தை சம்மதித்தார்.

ஒரு ஏணி எடுத்து வா என்றார். மகன் கொண்டு வந்தான்.

சுவரில் ஏணியை சாத்தி வைத்து, “இதில் ஏறி உச்சிக்கு செல். நான் என்னென்ன செய்து அரசியலில் நிற்கிறேன் என்பதை ஏணியில் எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் அடங்கும். அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாய் ஆகலாம்” என்றார் அப்பா.

“சரி, நான் ஏறுகிறேன். நீ ஏணியை பிடித்துக் கொள்” என்றான் மகன். சரி என்றார் தந்தை.

மகன் மெதுவாக ஏறினான். அவன் உச்சிக்கு போனதும் தந்தை கையை எடுத்து விட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் விழுந்தான்.

இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன். ”ஏன் இப்படி கையை எடுத்து விட்டாய்?” என்று கூச்சலிட்டான்.

தந்தை சிரித்துக் கொண்டே, ”எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?” என்று கேட்டார்.

இதுதான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், இனி நம்மை நாமே வளர்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்தான்.

எவ்வளவு தூரம்தான் தன்னை வளர்த்துக் கொள்கிறான் பார்ப்போம் என நினைத்த தந்தை, சிறிது விட்டுப் பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டு விட்டார்.

இதுதான் ஜெயா சொன்ன கதை.

அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தவே இந்த கதையை சொன்னேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அவர் பொடி வைத்து முடித்ததுதான் இது கோபாலபுரம் குடும்ப கதை என்ற பேச்சாகி இருக்கிறது.

திடீரென்று ஒரு கண் இழந்த சம்பவத்தை கருணாநிதி நேற்று சொன்னார். ஜெயலலிதா இன்று விழாவுக்கு சம்மந்தமே இல்லாத அப்பா மகன் கதை சொல்கிறார். என்ன நடக்கிறது என்கிறார்கள் ஊடகர்கள்.

கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் சண்டை மூட்டும் ஜெயா முயற்சி பலிக்காது என்கிறார் அறிவாலய நிர்வாகி.

நாளை அடுத்த கதை வெளிவரும்.

kathirvaelKathir Vel
 
Leave a comment

Posted by on February 10, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: