RSS

அந்த நாள்

11 Feb

தமிழகத்தை ஆளப்பிறந்தவன் நான் என்ற முனைப்போடு ஆட்சி புரிந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட் டம் அவர் பதவி விலக வழிவகுத்தது. கனம் காமராஜர் ராஜாஜியின் இந்த திட்டத்தை கடு மையாக எதிர்த்தார். பெரியார் காமராஜருக்கு தன் முழுமையான ஆதரவை நல்கினார். காங்கிரஸ் கட்சி காமராஜரின் பின்னால் அணி வகுத்து நின்றது. இதனால் காங்கிரசில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகினார். சுதந்திரா கட்சி என்ற பெயரில் ஒரு பதிய கட்சியை நிறுவினார்.

அடுத்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் காமராஜரை தமிழக முதல்வராக தேர்வு செய் தது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை முழுமையாக ஓழித்தார் காமராஜர். அவர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக மிளிர்ந்தது. இதனாலேயே தமிழக மக்கள் தொடர்ந்து மூன்று முறை காமராஜரை முதல் வராக தேர்வு செய்தனர். என்றாலும் பதவி ஆசை துளியும் இல்லாத அவர் தானாக முன்வந்து தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதயவர்கள் கட்சிப்பணி ஆற்ற வேண்டும் இளைஞர்கள் ஆட்சியில், அதிகாரத்தில் அமர்ந்து நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற அவரது திட்டம் கண்டு நாடு வியந்தது. நேரு காமராஜரை புகழ்நதார். இது நாட்டில் ஒரு அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட உதவியது.

காமராஜரின் இடத்தில் பக்தவத்சலம் அமர்ந்தார். காமராஜரின் கனவு திட்டங்கள் அழிந்து போக பக்தவத்சலம் உதவினார். ஹிந்திமொழி தமிழகத்தில் கால் பதிக்க முதல்வர் பக்த வத்சலம் இடம் கொடுத்தார். மொழிப் பிரச்சனை தமிழகத்தை உலுக்கியது. காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் அழியவும் அது காரணமாக அமைந்தது. திறமையற்ற பக்த வத்சலத்தை முதல்வர் பதவியில் இருந்து மக்கள் தூக்கி எறிந்தனர்.

1967 ம் ஆண்டுகளில்
திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் அமைய ஒரு புதிய அரசியல் புரட்சிக்கு வித்திட்டது. மொழி பிரச்சினை ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. மாணவர்கள் கழகத்தில் பின்னால் அணிவகு த்து நின்றனர்.விலைவாசி ஏற்றம், அரிசி தட் டுப்பாடு, பக்தவத்சலத்தின் நிர்வாக திறமை யின்மை, போலீஸ் அத்துமீறல்கள் மக்களின் கோபத்தை உச்சத்தில் கொண்டு சென்றன. ஒரு புதிய அரசியல் வரலாற்றை உருவாக்க மக்கள் தயாராயினர். காங்கிரசை புதைகுழிக் கு அனுப்பும் முயற்சிக்கு முழு ஆதரவையும் நல்கினார் கனம் பக்தவத்சலம்.

அண்ணாவின் பேச்சும், நாவலர், கலைஞர் போன்றோாரின் ஆற்றலும் தமிழர்களை கவர்ந்தன. இவர்களால் ஒரு புதிய தமிழகத்தை உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பினர். இவர்களுக்கு உதவ ராஜாஜி முன் வந்தார். ஆதித்தனாரும், மபொசியும் காயிதே மில்லத்தும், அண்ணாவின் பின்னால் அணி திரண்டனர். பெரியார் காமராஜரை ஆதரித்தார்.

1967 தமிழக பொதுத்தேர்தல் தமிழகத்தின் தலைவிதியை மாற்றி எழுதியது.

காமராஜ் அண்ணாச்சி
பருப்பு விலை என்னாச்சு
பக்தவத்சலம் அண்ணாச்சி
அரிசி விலை என்னாச்சு

காமா கக்க சுப்பா
லூர்த அக்கா
போடுறீர் குல்லா

போன்ற தெருமுனை வாசகங்கள் மக்களை மிகவும் கவர்ந்தன. எம்ஜிஆர் குண்டடி பட்டு கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் போஸ்டர்கள் வீதி தோறும் ஒட்டப்பட்டன. எம்ஜிஆர் நடித்த படங்களின் வசனங்கள், பாடல்கள் சந்து பொந்தெல்லாம் ஒலி பரப்பப்பட்டன.
அரசியல் மாற்றம் ஒரு மக்கள் புரட்சியாகவே நடந்து முடிந்தது.179 தொகுதிகளில் வென்று கழகம் சாதனை படைத்தது அன்று.

கனம் காமராஜர் தோற்றார்
பக்தவத்சலம் தோற்றார்
காங்கிரஸ் பேரியக்கத்தின் தூண்களெல்லாம் சாய்ந்தன.
படிப்படியாக காங்கிரஸ் பேரியக்கமும் கழக அலைகளில் சிக்கி கரைந்து போனது.

50 ஆண்டுகால கழக ஆட்சிகளின் பிடியில் சிக்கி தத்தளிக்கும் தமிழகத்தை காப்பாற்ற முனைபவர்கள் யார்? ஒரு புதிய தமிழகத்தை உருவாக்கப் போவது யார்? இன்றைய தலைவர்களிடம் இதற்கான சிறப்பு தகுதிகள் எதுவு ம் இருப்பதாக தெரியவில்லை.

அதுவரை
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

12651373_10205672862009328_1254371045884358383_n
Vavar F Habibullah
Advertisements
 
Leave a comment

Posted by on February 11, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: