RSS

உகாண்டா …அவன் பயணத்தை தொடர்கிறான் !

16 Feb

அன்பு உள்ளங்கள் வாட்ஸப்பிலும்,முகநூலிலும் உகாண்டா தேர்தல் குறித்த எச்சரிக்கை செய்திகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்..

எல்லா தேர்தல்களிலும் இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலை இங்கு நிலவினாலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் மக்களை ஒரு டென்ஷனான நிலைக்கு தான் ஆளாக்கி இருக்கிறது..

இரு இந்தியர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள்..அது ஒன்றும் புதிதல்ல.

முன்பு ஒரு காடு பிரச்சனையில் அவர்களிடம் அடி வாங்காமல் தப்பி வந்த அனுபவம் எனக்குண்டு..அதன் பிறகு அந்த வழியே வந்த இன்னொரு இந்தியர் பலமாகத் தாக்கப் பட்டார்.இன்னொருவர் கொல்லப் பட்டார்..அதனால் சந்தர்பங்களை எதிர்பார்த்து பலரும் உள்ளனர்..

எதுவும் நடக்காது என்று சிலரும்,ஏதாவது நடந்து விட்டால் என்று சிலரும் பதைபதைப்போடு உள்ளனர்..

நம் கோட்டாறு ஊரை சேர்ந்த பல மக்கள் இங்கு உள்ளனர்..மேலும் கேரளா,குஜராத் மக்களும் உள்ளனர்..நான் இருக்கும் இடத்தில் பல குஜராத்தியர்கள் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டார்கள்..

அதனால் நண்பர்கள் மூலமாக வருகின்ற எச்சரிக்கை செய்திகளை புறம் தள்ளாமல் மக்கள் விழிப்போடு நடந்துக் கொள்ள வேண்டும்..

மேலும் ஒரு வாரத்திற்கு தேவையான சாதனங்கள்,நண்பர்களோடு சேர்ந்து இருப்பது,பாஸ்போர்ட் வைத்து கொள்வது ,வெளியில் தனியாக எங்கும் போகாதிருப்பது இப்படி பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது…

இறைவனை மீறி இங்கு எதுவும் நடந்து விடப் போவதில்லை.இருந்தாலும் “ஒட்டகத்தை கட்டிப் போட்டு விட்டு தொழு” என்பது தான் நபிகளார் வாக்கு…

இப்போது உகாண்டா நம் மக்கள் பிரச்சினைகளில் ஒற்றுமையாக இருப்பது போல எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்..

வல்ல நாயன் அல்லாஹ் நம் காரியங்கள் எல்லாவற்றையும் இலேசாக்கி எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்து மக்கள் சந்தோஷமாக வாழ நல்ல ஒரு ஆட்சியை அமைத்து தருவானாக..

ஆமீன்.ஆமீன்.யாரப்பில் ஆலமீன்…

வேக வேகமான இட மாறுதல்களும் ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கான மளிகை சாமான்களை வாங்கி குவிப்புக்களும். ஆபத்து ஏற்பட்டால் ஐயோ என்னை காப்பாற்றுவார் யாருமில்லையா என்று தொலைபேசியில் அழைக்கவும், அழைப்பை ஏற்று கூப்பிட்டவரை காப்பாற்ற, ஆலம் விழுது பிடித்து அந்தரத்தில் பறந்து வரும் எம்.ஜி.ஆர். நம்பர்களும், இதுவரை கேட்காத பிரத்யேகமான துவாக்களும் அல்லாஹ்வின் உவப்பே அத்தனையிலும் மேலானது என்று பக்தி சொட்டும் புண்ணிய காட்சிகளுமாக இப்படி முற்றிலும் மாறிய காட்சிகள் உகாண்டாவில் எங்கெங்கும்.

காணும் காட்சிகளைப் பார்த்து வழிப்போக்கன் அவன் ஒரு புன்னகையை மட்டும் செலவு செய்து அமைதியாக அவன் பயணத்தை தொடர்கிறான் !

10813_488830407926340_2010597110637474255_nRaheemullah Mohamed Vavar

 

Raheemullah Mohamed Vavar

 
Leave a comment

Posted by on February 16, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: