RSS

2015-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்

20 Feb

2015-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர் விருதளித்து, அங்கீகரித்து ஊக்கமூட்டிய விகடனுக்கும், இதற்கான களத்தையும் சுதந்திரத்தையும் நல்கி வரும் புதிய தலைமுறை நிர்வாகத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

என் கரங்கள் பற்றும் கோப்பையைத் தங்கள் கரங்களில் கண்டு நெகிழ்ந்து, மகிழ்ந்து, உச்சிமோந்த எண்ணற்ற தூய நண்பர்கள் என் பேறு. சோர்வுறும் தருணங்களில் எல்லாம், நீதிக்காக சலியாது போராடும் எளிய மனிதர்கள் பலரின் ஈடற்ற அன்பே எனை இயக்கும் உந்துசக்தி. சொற்களால் ஊக்கமூட்டிய பல்துறை ஆளுமைகளுக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் என் இதய நன்றி.

இரண்டாண்டுகளுக்கு முன், தமிழகத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற விருதை அளித்து, விவாத நிகழ்ச்சிகளின் டிரென்ட்செட்டர் என்று ‘நேர்படப் பேசு’வைப் பாராட்டிய விகடன், இவ்வாண்டு சிறந்த தொகுப்பாளர் என தெரிவு செய்தது, இருபதாண்டு கால ஊடகப் பணியில் நிறைவுதந்த தருணம்.

விவாத நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது ‘நேர்படப் பேசு’ என்ற விகடனின் சொற்கள், தனியொருவனுக்குச் சொந்தமானவையல்ல! நேர்த்தியிலும் நடுநிலையிலும் மாறாத கவனம் செலுத்தும் புதிய தலைமுறையின் நிர்வாகம், வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் வழிகாட்டி துணைநிற்கும் எமது குழுவினர், சக நெறியாளர்கள், செழுமையும் கருத்தாழமும் மிக்க விவாதங்களைச் சாத்தியமாக்கி, பேச்சரங்கின் தரத்தை உயர்த்தப் பங்களித்த பல்துறை விருந்தினர்கள் என அனைவருக்கும் புன்முறுவல் பூத்த பூச்செண்டைப் பரிசளித்திருக்கிறார் விகடன் தாத்தா!

அன்புக்கும் கனிவுக்கும் தோள் அணைத்துத் தரும் ஊக்கத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
Gunaa Gunasekaran

 
Leave a comment

Posted by on February 20, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: