RSS

வேம்பும் முருங்கையும் ….!

08 Mar

ராஜா வாவுபிள்ளை

எங்கள் வீட்டு
பின்புறத் தோட்டத்தில்
வளரும் வரங்கள்
வளர்ந்து
எங்களையும் சேர்ந்தே
வளர்த்த மரங்கள்
பசிக்கும் பிணிக்கும்
கைகண்ட மருந்தை
அள்ளித்தரும்
கற்பகத்தருக்கள்
தென்றலை
இதமாய் வரவேற்று அணைத்து
அளவில்லாமல்
வீட்டிற்குள் வரவழைக்கும்
சொந்தங்கள்
கொசுக்களின் அதிரடி
வரவை தடுத்து
வேல்கொண்டு விரட்டும்
வேம்பு
விருந்துகளின் அவசர
வரவை வரவேற்று
காய்கள் தந்து உணவூட்டும்
முருங்கை
காத்தோ கருப்போ
நோயோ நொடியோ
அண்டிவிடாமல் காக்கும்
வந்து விட்டாலும்
விரட்டிவிடும்
வேம்பு
அணில்பிள்ளைகள்
அரும்புப் பல்லில் கொறிக்கவும்
வீட்டுப்பிள்ளைகள்
ஆசையுடன் உண்ணும்
துவரம் சமைக்க தரும்
முருங்கைப் பூ
காய்ச்சலோ பீய்ச்சலோ
முருங்கைப் பட்டை
சாறு பிழிந்து
மூன்று வேளை அருந்த
சுகம்தரும் மருந்து
பள்ளி விடுமுறைகளில்
ஊஞ்சல் கட்டி
களித்திருந்த
வேப்பமரக் கிளைகள்
நினைவுகள் நிதர்சனமாய்
மனதில் ஆடும்
இளமையும் இன்பமும்
விருந்தும் மருந்துமாய் தந்ததில்
வேம்பும் முருங்கையும்
வருவதில் முதலிடம்

1915784_1752216725002117_6437085887224788060_nராஜா வாவுபிள்ளை

 

 

 
Leave a comment

Posted by on March 8, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: