RSS

குருவிகளே… எங்கள் ஞானக் குருக்களே…

21 Mar
Abu Haashima

அன்று –
எங்கள் தோள்களில்
ஒரு குழந்தையைப்போல்
ஒட்டி உறவாடி
உறவு கொண்டாடிய உயிரே !
எங்கே போனாய்
இன்று !

இருள் பிரியாத வேளையில்
இமை பிரித்து
உன் இதழ் விரித்து
நீ சிந்தும்
உன் செல்லச் சிணுங்கல்தானே
சூரியனை தட்டி எழுப்பி
நடைபயில வைக்கும் !

ஜன்னல்களில்
நீ வந்து உட்கார்ந்து
இசைக்கும் ராகம் கேட்டு
கண்விழிக்காத
சின்னச் சிட்டுக்கள் உண்டோ ?

உன் சங்கு சுண்டுகளால்
அரிசி கொத்தித் தின்னாத
முற்றங்களுமுண்டோ ?

அதனால்தானே
காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று
எங்கள் பாரதியும்
பாடம் நடத்திச் சென்றான் !

எங்கள் ஆலயங்களின்
எல்லா வாசல்களும்
உனக்காக
திறந்தே கிடக்கின்றன !
நீ மட்டும் நாத்திகனாய் …

வாழ்வே மாயம் என்பதை
எங்களுக்குச் சொல்வதற்காகவா
நீ மாயமாகி விட்டாய் !

இன்று சிட்டுக் குருவிகள் தினமாம் !

நீ ஊஞ்சலாடிய
ஊர்மரங்களை
உரமாக்கி
கட்டி எழுப்பிவிட்டோம்
கழுமரங்களை !
அவை –
குருவிகளின்
உயிர் குடிக்கும்
அலைக் ” கதிர் ” மரங்கள் என்று
அறியாமல் செய்துவிட்டோம்
பெரும் பிழை !

குருவிகளே…
எங்கள் ஞானக் குருக்களே…
செல்போன் தின்று வாழும்
நாங்களும் இப்போது
குருவிகளே…

12208361_917356515009745_8530835404039582894_nAbu Haashima
 
Leave a comment

Posted by on March 21, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: